இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி நீடிக்கிறது. இந்திய அணிக்கு 10 போட்டிகள் மீதும் இருக்க ஆஸ்திரேலியா அணிக்கு 7 போட்டிகள் மீதம் இருக்கிறது.
இந்திய அணி ஓடுகிறது
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” முதலில் இந்தியாவைப் பற்றி எடுத்துக் கொண்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போது இந்தியாதான் டேபிள் டாப்பர். அவர்களுக்கு 10 போட்டிகள் இருக்கிறது. இந்திய அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதனுடைய வெற்றி சதவீதம் 85 சதவீதமாக இருக்கும்”
“இருந்தாலும் கூட உள்நாட்டில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கு எதிராக ஒன்று இரண்டு போட்டிகளை வென்றால் கூட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஆஸ்திரேலியாவில் மொத்தமாக போட்டிகளை கைவிடாமல் இருந்தால் நல்லது”
எட்டுக்கு எட்டு ஆஸ்திரேலியாவால் முடியாது
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா “நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையான போட்டியாளர்கள். அவர்களுக்கு இன்னும் எட்டு போட்டிகள் மீதும் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள், இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் 2 போட்டிகளும் ஆஸ்திரேலியா அணிக்கு இருக்கிறது. 4க்கு1 என இந்தியாவை அவர்கள் வீழ்த்தினால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அவர்கள் தங்களுடைய அனைத்து 7 டெஸ்டிலும் வெற்றி பெற்றால் அவர்களுடைய வெற்றி சதவீதம் 73.3 % ஆக இருக்கும்”
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்.. 500 விக்கெட் மேல் எடுத்துள்ள 4 பவுலர்கள்.. சிஎஸ்கே வீரர் முதலிடம்
“ஆஸ்திரேலிய அணி தங்களுடைய ஏழு போட்டியிலும் வெற்றி பெற்றால் மிக எளிதாக அவர்களால் இறுதிப் போட்டிக்குள் தகுதி பெற்று விட முடியும். ஆனால் அவர்களால் நிச்சயமாக 7 போட்டிகளையும் வெல்ல முடியாது. அது நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று கூறியிருக்கிறார்