அபிஷேக் ஷர்மா இந்த சிக்கல்ல மாட்டுவாரு.. அந்த 2 பேர் ரெடியா இருக்காங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
260

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அபிஷேக்சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவ்வளவு எளிதாக இருக்காது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 132 ரன்கள் இலக்கை இந்திய தொடக்க ஜோடியான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். சாம்சன் 26 ரன்கள் மற்றும் அபிஷேக் சர்மா 79 ரன்கள் குவித்தனர்.

இதில் குறிப்பாக அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பௌண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசி 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் எட்டு சிக்ஸ் என 79 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியிலும் அவரது அதிரடியைக் காண இந்திய அணி தயாராக இருக்கும் நிலையில் அபிஷேக் ஷர்மா எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

அபிஷேக்சர்மாவுக்கு உள்ள சிக்கல்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முதல் போட்டியில் அபிஷேக் ஷர்மா ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இரண்டாவது போட்டியில் பவுண்டரி லைன் அவருக்கு பெரிதாக இருக்கும். முதல் போட்டியை போல அவர்கள் இந்த போட்டியில் அட்கின்சனுடன் தொடங்குவார்கள் என்று நினைக்கவில்லை. ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இருப்பதால் அவர்களை வைத்து இங்கிலாந்து அணி தொடங்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இது ஒரு சுவாரசியமான போட்டியாக இருக்கும்.

இதையும் படிங்க:ஒரே நாளில் 20 விக்கெட்.. மாறி மாறி ஆல் அவுட் ஆன பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ்.. 2வது டெஸ்ட்

அதேபோல சாம்சனுக்கும் இது ஒரு சுவாரசியமான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அட்கின்சன் ஓவரில் 22 ரன்கள் குவித்தார். ஆனால் அவர் வேறு யாருக்கும் அவ்வளவு ரன்கள் எளிதாக எடுக்கவில்லை. இவ்வளவு உயரமான பந்துவீச்சாளர்கள் முயற்சி எடுத்து பந்து வீசும் போது சஞ்சு செய்யும் அளவுக்கு கிரீசில் யாராவது ஆழமாக சென்றால் பின் பாதத்திலிருந்து அவர் விளையாடுவது சற்று கடினமாகிவிடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -