சர்ப்ராஸ் கானின் ஸ்பெஷலே வேற.. 17 வருஷத்துக்கு முன்ன நான் அதை பார்த்தேன் – அஜய் ஜடேஜா பாராட்டு

0
61
Jadeja

இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கானின் திறமைகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா மிகவும் பாராட்டி பேசி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து வேலைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் முக்கியமான நேரத்தில் சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கும் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் பெரிய நம்பிக்கையை உருவாக்கினார். அவருடைய இந்த இன்னிங்ஸ் பலர் அது பாராட்டையும் பெற்று வருகிறது.

- Advertisement -

சர்பராஸ் கானின் ஸ்பெஷல் இதுதான்

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறும் பொழுது “நீங்கள் எல்லோரும் அவருடைய ரன் அடிக்கும் பசியைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அதில் முக்கியமானது என்னவென்றால் அவருடைய ஆட்ட விழிப்புணர்வுதான். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் அடித்த ஆறு போட்டிகள் இருக்கின்றன. அந்த 6 பெரிய ஸ்கோர்களையும் நீங்கள் எடுத்துப் பார்த்தால் அதில் நான்கு போட்டியில் அவர் ஆட்டமெலக்க வில்லை. அவர் எளிதில் திருப்தி அடைவதில்லை. மற்றவர்கள் விட்டாலும் அவர் விடுவதில்லை”

” 2007 அல்லது 2008 ஆம் ஆண்டு நான் அவருடைய தந்தையை பார்த்த பொழுது அவரிடம் பயிற்சியில் ஏழு எட்டு சிறுவர்கள் இருந்தார்கள். அத்துடன் சேர்த்து சர்பராஸ் கான் இருந்தார். அவர் தன்னிடம் மட்டுமில்லாமல் தன்னைச் சேர்ந்தவர்கள் செய்யும் தவறுகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். உங்கள் தலைமுடி வெண்மையாக மாறும் பொழுது கிடைக்கும் ஆட்ட விழிப்புணர்வை விட, கருப்பாக இருக்கும் பொழுது கிடைப்பது முக்கியம். அது அவருக்கு கிடைத்திருக்கிறது”

- Advertisement -

அவரைப் பற்றி இந்த பேச்சே இருக்கக் கூடாது

மேலும் பேசிய அஜய் ஜடேஜா “அவரது திறமையைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. நீங்கள் ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அவர் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டு இருக்கிறார் என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது அவருடைய ரன் ஆவரேஜ் 70 இருக்கிறது. இது மிகவும் அதிகம். அவர் எல்லா சூழ்நிலைகளிலும் விளையாடி ரன் எடுத்திருக்கிறார்”

இதையும் படிங்க : பாக் அணியில் நீக்கம்.. பாபர் அசாம் நான் சொல்ற இத மட்டும் பண்ணுங்க .. வேற லெவல் கம்பேக் குடுக்கலாம் – சேவாக் அறிவுரை

“அவரது ஆட்டபாணி மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலான பேட்டர்கள் இப்படி விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சொந்த வழியில் விளையாடுவதற்கான முறையை கண்டுபிடிக்க வேண்டும். நாள் முடிவில் நீங்கள் எவ்வளவு ரன் அடித்தீர்கள் விக்கெட் எடுத்தீர்கள் என்பதுதான் முக்கியம். ரன் அடிப்பது எப்படி என்று அவருக்கு தெரியும். ரன் அடிப்பதற்கான வாய்ப்பை சூழ்நிலையை அவர் புரிந்து கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -