பாக் அணியில் நீக்கம்.. பாபர் அசாம் நான் சொல்ற இத மட்டும் பண்ணுங்க .. வேற லெவல் கம்பேக் குடுக்கலாம் – சேவாக் அறிவுரை

0
132

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

பாகிஸ்தான் அணி சமீப காலமாகவே தொடர்ச்சியான இறக்கங்களை கண்டு வருகிறது. டி20 உலக கோப்பை முதல் தற்போது நடைபெற்றறு முடிந்த வங்கதேச டெஸ்ட் தொடர் வரை அனைத்திலும் தோல்வியை தழுவிய நிலையில் அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டிகயிலும் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பாபர் அசாம் அப்ரிடி மற்றும் நசிம்ஷா என மூன்று முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கியது.

அதற்குப் பிறகு மைதானத்திற்கு தகுந்தவாறு வீரர்களை எடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியும் கண்டது. இந்த சூழ்நிலையில் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம் உள்நாட்டுத் தொடர்களில் விளையாடும் படி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வீரேந்திர சேவாக் அறிவுரை

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்போது “பாபர் அசாம் இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அவர் தனது உடல் தகுதிக்காக உழைக்க வேண்டும். தனது குடும்பத்தினரோடு சிறிது நேரம் செலவிட வேண்டும். பின்னர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் தொடர்.. அதிரடி முடிவெடுத்த டிராவிஸ் ஹெட்.. சம்மதித்த ஆஸி கிரிக்கெட் போர்டு

2014 ஆம் ஆண்டு முதல் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் இதுவரை 3962 ரன்கள் பாகிஸ்தான் அணிக்காக குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5729 ரன்களும் மற்றும் 123 டி20 போட்டிகளில் விளையாடி 4145 ரண்களும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது பேட்டிங் பார்மை சரி செய்து மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -