இந்திய கிரிக்கெட்

கிரவுண்டுக்கு வரணும்ல சும்மாவா.. சூரியகுமார கேப்டனா ஆக்கினதுக்கு காரணம் இதுதான் – முன்னாள் இந்திய பீல்டிங் கோச் பேட்டி

சமீபத்தில் இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 தொடர் மட்டுமே இந்திய அணியால் வெல்ல முடிந்தது. இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் கேப்டனாக கொண்டுவரப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்ததற்கான முக்கிய காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகிக் கொள்ள, அடுத்த கேப்டனாக இயல்பாக ஹர்திக் பாண்டியா வருவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

இப்படியான நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் வந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவை புறக்கணித்துவிட்டு சூரியகுமார் யாதவை கேப்டனாக கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இது சம்பந்தமாக ஹர்திக் பாண்டியா எந்த விதமான கருத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.

இந்தியத் தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மட்டுமே ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி மற்றும் அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்று காரணம் கூறியிருந்தார். இது அப்பொழுதே நிறைய விமர்சனத்திற்கு உள்ளானது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருந்த போது பில்டிங் பயிற்சியாளராக இருந்த ஆர் ஸ்ரீதர் கூறும்பொழுது ” இந்தியா விளையாடும் ஒவ்வொரு டி20 போட்டியின் போதும் சூரியகுமார் யாதவால் கிரவுண்டுக்கு வந்து விளையாட முடியும் என்பதும், அவருடைய பணிச்சுமை மற்றும் உடல் தகுதி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்காவில் சதம்.. ஆனால் இந்திய ODI அணியில் இடமில்லை – சாம்சன் மௌனம் கலைப்பு

மேலும் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய டி20 அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் இருந்த பொழுது, இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் செயல்பட்டு தன்னால் கேப்டனாக நல்ல முறையில் அணியை வழிநடத்த முடியும் என்று காட்டினார். இதுவும் அவரை கேப்டனாக கொண்டு வருவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts