இந்திய அணிக்கு அவர் திரும்பி வந்தால் மட்டுமே.. ஆஸியில் ரோகித் படை கப் அடிக்கும் – மேத்யூ ஹைடன் அறிவுரை

0
1447
Hayden

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட ஒரு வீரர் இந்திய அணியில் இருக்க வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய விற்கு சொற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணங்கள் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. எனவே மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் கைப்பற்றுமா என்கின்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

- Advertisement -

டிராவிட் – லக்ஷ்மணன்

ஆஸ்திரேலியா அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் அசுர பலத்தில் இருந்த பொழுது 2001 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று, இரண்டாவது போட்டியில் மூன்று நாட்கள் முன்னிலையில் இருந்தது.

இப்படியான நிலையில் நான்காவது நாள் முழுக்க டிராவிட் மற்றும் லக்ஷ்மணன் இருவரும் விக்கெட் கொடுக்காமல் விளையாடி, இந்திய அணி சாதனை டெஸ்ட் வெற்றியை பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்கள். தற்பொழுது 2018-19ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாலில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புஜாராவை இவர்கள் இருவரைப் போல மேத்யூ ஹைடன் மதிப்பிடுகிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா சந்தை வேற மாதிரி

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை யார் வெல்வார்கள் என்று இரண்டு அணிகளையும் பார்த்தால், இரண்டு அணியுமே சமமாக இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கூற முடியாது. ஆனால் இந்திய அணியில் புஜாரா இருந்திருந்தால் இந்திய அணி முன்னிலையில் இருந்திருக்கும்.

இதையும் படிங்க :

புஜாரா ஒரு எக்சைட்டிங்கான பேட்ஸ்மேன் ஆக இருந்தாரா? என்றால் கிடையாது. ஆனால் அவர் ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வீரராக இருந்தாரா? என்றால் உண்மையில் அப்படித்தான் இருந்தார். திரும்பிப் பார்க்கும் பொழுது ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மணன் இருவரும் எங்கள் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இங்கு நிலைத்து நின்று விளையாடுவது எப்பொழுதும் மதிப்பை கொடுக்கக்கூடியது. புஜாரா இவர்களைப் போலானவர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -