இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் எம் எஸ் தோனி குறித்து குற்றம் சாட்டிய பழைய வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலானதை தொடர்ந்து யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
2007ஆம் ஆண்டு இந்திய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பை வென்ற போது அதில் விளையாடிய இர்பான் பதான், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை சில ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தோனி பாரபட்சமாக வீரர்களை தேர்வு செய்கிறார் என்று 2012 ஆம் ஆண்டு இர்பான் பதான் ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.
இந்த வீடியோ தற்போது கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது கூறித்து யுவராஜ் சிங் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங், இர்ஃபான் பதான் மட்டுமல்லாமல் கௌதம் கம்பீர் ஏற்கனவே இது குறித்து பேசி இருப்பதாகவும், மேலும் வீரேந்திர சேவாக் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசி இருப்பதாகவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த விஷயம் இர்பான் பதான் பற்றி மட்டுமல்ல. கௌதம் கம்பீர் ஏற்கனவே இது குறித்து பேசி இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் வீரேந்திர சேவாக் இது குறித்து தனது கருத்தை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். ஹர்பஜன் சிங் எப்படி ஒரு ஈயை போல இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ருதுராஜ்.. செலக்டர்களுக்கு செக் வைத்த சிஎஸ்கே சிங்கம்.. மாஸ் சம்பவம்
அவர் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். எம் எஸ் டோனி இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. பதில் அளிக்க விரும்பாததற்கு நிச்சயமாக குற்ற உணர்ச்சி இருக்கும் என்று யுவராஜ் சிங் தந்தை பேசியிருக்கிறார்.






