அஸ்வின் இப்படி செஞ்சது எனக்கு பிடிக்கல.. ஆனா அதுக்கு தோனி அவர திட்டிட்டாரு – வீரேந்திர சேவாக் பகிர்வு

0
539

இந்தியா கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். அனைவரும் அஸ்வினுக்கு தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் ஒன்றை தற்போது நினைவு படுத்தி பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் மூத்த நட்சத்திர டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தாலும் அனைவரும் தற்போது அஸ்வினை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவின் தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்திருக்கிறார்.

இதுவரை 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்திருக்கும் நிலையில் அவர் தற்போது இந்திய அணியின் சிறந்த ஜாம்பவானாக திகழ்கிறார். இந்த நிலையில் அஸ்வினின் தொடக்க காலத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மேக்ஸ்வெல்லை ஆட்டமிழக்கச் செய்துவிட்டு அஸ்வின் தூசியை ஊதுவது போன்ற செய்கை அனைவரும் அறிந்திருப்போம். இந்த சூழ்நிலையில் வீரேந்திர சேவாக் அந்த செய்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனி அஸ்வினை திட்டி இருக்கிறார்

அது குறித்து சேவாக் கூறும் போது “நான் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது அஸ்வின் மேக்ஸ்வெல்லை ஆட்டம் இழக்கச் செய்துவிட்டு கொண்டாட்டத்தில் தூசியை ஊதுவது போன்ற செய்கையை வெளிப்படுத்தினார். அந்த செய்கை எனக்கு பிடிக்கவில்லை. அவர் அப்படி செய்திருக்கக் கூடாது இது விளையாட்டின் மகத்துவத்துக்கு எதிரானது என்று நான் எதையும் வெளியே கூறவில்லை. இருந்தாலும் மகேந்திர சிங் தோனி அந்த சமயத்தில் கோபமடைந்து அவரையும் திட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க:3வது போட்டி டிரா.. சிக்கலில் இருக்கும் இந்திய அணி.. என்ன செய்தால் WTC பைனலுக்கு தகுதி பெறலாம்.. முழு விபரம்

அதை செய்தது அஸ்வினின் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அதைப்பற்றி அப்போது யாராவது பேசியிருந்தால் அது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடும். எனவே ஆடுகளத்தில் நடைபெறுவது அங்கேயே விட்டுவிட வேண்டும். உள்ளே நடக்கும் விஷயங்கள் குறித்து பேச தொடங்கினால் அது ஒவ்வொரு போட்டியிலும் சலசலப்பை ஏற்படுத்தும். எனவே வீரர்கள் இடையே மைதானத்தில் நடப்பதை அப்படியே விட்டு விட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -