கேப்டன் ரோஹித்தை.. இளம் டெஸ்ட் வீரர்கள் இந்த இடத்தில் கண்டிப்பா மிஸ் செய்வார்கள் – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
134

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் அவரது இழப்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் பார்மெட்டில் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோஹித் சர்மா, கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்குப் பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றுவது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளால் இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

தற்போது அடுத்த சுழற்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். எப்போதுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும், அணி வீரர்களை ஒரு ஜாலியான மனநிலையில் வைத்திருப்பதில் சிறந்தவராக விளங்கும் ரோஹித் சர்மாவை இனி இந்திய அணியின் வீரர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிஸ் செய்வார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் குறித்து சுனில் கவாஸ்கர்

இதுகுறித்து கவாஸ்கர் விரிவாகப் பேசும் போது “ஒரு கேப்டனாக அவரது நிதானமான நடத்தை வெற்றி பெற வேண்டும் என்கிற மன உறுதியை மறைத்தது. மேலும் அவரது பம்பையா இந்தி மொழி அணியின் இளைய உறுப்பினர்களுக்கு நகைச்சுவையான முறையில் ஒரு கடுமையான செய்தியையும் தெரிவித்தது. இது கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் கூட அன்றைய ஆட்டத்தின் முடிவில் அவருடன் கொண்டிருந்த தொடர்புகளை மிஸ் செய்வார்கள்.

இதையும் படிங்க:ஆள விடுங்க.. டெஸ்ட் கேப்டன் பதவியை நிராகரித்த ஜஸ்பிரித் பும்ரா.. பொறுப்பை ஏற்காத காரணம் என்ன.? வெளியான முக்கிய தகவல்

ரோகித் சர்மாவின் தலைமையில் இருதரப்பு தொடர்களிலும், உலகப் போட்டிகளிலும் இந்திய மூவர்ணக் கொடி பெருமையுடன் பறந்தது. இந்திய அணியை மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் இரண்டு முறை வெற்றி பெற்றது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது அவருக்கு பெரிய கைத்தட்டல் மற்றும் எழுந்து நின்று பாராட்டும் கிடைத்தது” என கவாஸ்கர் பேசி இருக்கிறார். தற்போது டி20 ஃபார்மெட்டில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டனாக சுப்மான் கில் இருப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -