இந்திய கிரிக்கெட்

அந்த அணியை ஜெயிச்சா.. உலக கோப்பையை ஜெயிச்ச மாதிரி.. கோலி டீம் இதை செஞ்சிருக்கு – சுனில் கவாஸ்கர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதில் இந்திய அணியின் விராட் கோலி கடைசி போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி கேப்டனாக இருந்த போது செய்த சாதனைகள் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி, அவரது தலைமையில் இந்திய அணி மூன்று வடிவ தொடரிலும் ஐசிசி கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி 332 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் 178 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதே வேளையில் இந்திய அணியின் விராட் கோலி கேப்டனாக இருந்து 213 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி அதில் 135 போட்டிகளில் வெற்றியும், 60 போட்டிகளில் தோல்வியும் இந்திய அணி தழுவியுள்ளது.

ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பை பாராட்டி பேசி இருக்கிறார். ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காவிட்டாலும் விராட் கோலி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

உலக கோப்பையை வென்றதற்கு சமம்

இது குறித்து அவர் கூறும் போது “இருதரப்பு தொடர்களை பார்க்கும்போது இந்திய அணி உள்நாடாக இருந்தாலும் அல்லது வெளிநாடாக இருந்தாலும் பல போட்டிகளை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையில் பல நாடுகளுக்கு இடையிலான ஐசிசி தொடரில் இந்திய அணி அவ்வளவாக வெற்றி பெறவில்லை. நீங்கள் அதனை சமன் செய்ய வேண்டும். வேறு எந்த கேப்டனின் கீழ் இல்லாத அளவுக்கு இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் அதிக அளவு போட்டிகளை வென்றுள்ளது.

இதையும் படிங்க:68 வருடம்.. 414 பந்து பார்ட்னர்ஷிப்.. ரஞ்சி பைனலில் கேரளாவுக்கு கருண் நாயர் தலைவலி.. முதல் நாள் முடிவு

நான் ஒரு ஐசிசி கோப்பையை விரும்புகிறேன், ஏனென்றால் பல நாடுகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஷிப் தொடர் நீங்கள் விரும்பக் கூடிய ஒன்றாகும். ஆனால் அது நீங்கள் எந்த இருதரப்பு தொடரை பற்றி பேசுகிறீர்கள் என்பதையும் பொருத்ததாகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு தொடரை நீங்கள் வென்றால் அது உலக கோப்பையை வென்றதற்கு சமமாகும். அதேபோல இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரை வென்றால் அதுவும் பெரியதாக பேசப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by