இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதில் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வேண்டும் கொண்டுவரப்பட்டுள்ளார்.
மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விரைவாக ஆட்டம் இழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் குறிப்பிடத்தக்க 30 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவரை அமர வைப்பது அவருடைய தன்னம்பிக்கையை பெருமளவு பாதிக்கச் செய்யும் என தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க:குல்தீப் யாதவ் ரஞ்சியில ஓபனிங் பேட்டிங் பண்ணனும்.. கம்பீர் எதிர்பார்க்கிறது மோசமா இருக்கு – இந்திய முன்னாள் வீரர் பேச்சு
இது குறித்து அவர் கூறும் போது “சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். தன்னம்பிக்கையோடு இருக்கும் ஒரு இளம்வீரரை விளையாடுவதற்கு வாய்ப்பு தராமல் இப்படி வீழ்த்துவது சரியாக தெரியவில்லை” என தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நீளத்தை அதிகப்படுத்தவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.