இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் புதிய பயிற்சியாளர் கம்பீர் வற்புறுத்தலால் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணிக்கு திரும்பினார்கள். தற்போது இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக துவங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் திரும்புவதாக இருந்தார்கள். அவர்கள் ஒரு நீண்ட ஓய்வெடுக்க திட்டமிட்டு இருந்தார்கள்.
இப்படியான நிலையில் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கம்பீர் வீரர்கள் நல்ல பார்மிலும் நல்ல உடல் தகுதியிலும் இருந்தால் எல்லா போட்டியிலும் விளையாட வேண்டும் என அணிக்குள் வருவதற்கு முன்பே கூறியிருந்தார். அதன்படியே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இந்திய ஒரு நாள் அணிக்குள் கொண்டு வந்தார்.
ஆனால் இந்தத் தொடரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கலாம். மேலும் அணியில் கொண்டுவந்த ஹர்ஷித் ராணாவையும் பயன்படுத்தவில்லை. மேலும் சுக்மன் கில்லுக்கு எல்லா வடிவத்திலும் துணை கேப்டன் பொறுப்பை கொடுத்து அணிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர் சரியாக விளையாட விட்டாலும் அவர் இடத்திற்கு யாரையும் கொண்டு வர முடிவதில்லை.
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரிஷ் ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இந்த தொடரில் இளம் வீரர்களான ருதுராஜ் போன்றவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மேலும் அணியில் கூட்டிச் சென்ற ஹர்ஷித் ராணாவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அவர் கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் கே எல் ராகுல் போன்ற ஒரு வீரரை மூன்றாவது போட்டியில் இருந்து நீக்குகிறார்கள். இஷான் கிஷான் வெள்ளைப் பந்து வடிவத்தில் கடைசியாக சிறப்பாக விளையாடி இருந்தார்.
இதையும் படிங்க : அவ்ளோ பெரிய ஆளு.. அவரையே 2 தடவ அவுட் பண்ணியும்.. ஐபிஎல் வேணாம் வீட்டுக்கு போலாம்னு தோணுச்சு – ஆடம் ஜம்பா பேட்டி
கேஎல்.ராகுல் போன்ற ஒரு வீரருக்கு இப்படி எல்லாம் செய்தால், கடைசியில் அவருக்கு எதுவும் புரியாமல் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக போய்விடும். ருதுராஜ் கிரிக்கெட் வாழ்க்கையையும் இப்படித்தான் அழித்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தவர்கள் என்றால் அதற்கு ஒரு மாதிரி வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை எல்லாம் அப்படியே விட்டு விடுகிறார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.