அவ்ளோ பெரிய ஆளு.. அவரையே 2 தடவ அவுட் பண்ணியும்.. ஐபிஎல் வேணாம் வீட்டுக்கு போலாம்னு தோணுச்சு – ஆடம் ஜம்பா பேட்டி

0
461

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக திகழும் ஆடம் ஜம்பா 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் விளையாடினார். அந்த ஆண்டில் நட்சத்திர தொடக்கத்தை பெற்றிருந்தாலும், அந்த சீசனில் அதற்கு பின்னர் வந்த போட்டிகளில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல்லில் தான் சந்தித்த இன்ப துன்பங்கள் குறித்தும், ஒருபோதும் மில்லியன் கணக்கில் சம்பளமாக ஐபிஎல் தொடரில் இருந்து பெற்றதில்லை என்றும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சூதாட்ட புகாரின் காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2016 மற்றும் 17ஆம் ஆண்டுகளில் தடையில் இருக்க, அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக புனே மற்றும் குஜராத் அணிகள் அந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கின. 2016ஆம் ஆண்டு புனே அணிக்காக ஆடம் ஜாம்பா களம் இறங்கினார். அந்த தொடக்கம் அவருக்கு நல்லபடியாக அமைந்தது என்றே கூறலாம். பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் இன் விக்கெட்டை இரண்டு முறை வீழ்த்தினார்.

அதற்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் அதற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜாம்பா ஐபிஎல் தொடர் மூலம் தனது அனுபவத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விராட் கோலிக்கு எதிராக முதன் முறையாக பந்து வீசினேன். மேலும் டிவிலியர்ஸின் விக்கெட்டை இரண்டு பந்துகளில் இரண்டு முறை எடுத்னேன். அதற்கு அடுத்த போட்டியில் ஆறு விக்கெட்டுகள் எடுத்தேன். அந்த ஆறு விக்கெட்டுகளால் அதற்குப் பின்னர் எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு எனக்கான வாய்ப்புகள் மங்கியது. அந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது எனக்கு சரியான ஆண்டாக அமையவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:அஸ்வின் லயன் மட்டுமே கிடையாது.. இப்ப இன்னும் இந்த 3 பெஸ்ட் ஸ்பின்னர்ஸ் இருக்காங்க – ரங்கனா ஹெராத் தேர்வு

ஐபிஎல் தொடரின் மூலம் மில்லியன் டாலர்கள் சம்பளமாக நான் ஒருபோதும் பெற்றதில்லை. ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் சர்வதேச தொடரில் மிகச் சிறிய அனுபவம் பெற்று இருந்தேன். நான் எப்போதும் ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஐபிஎல்லின் பகுதியாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து அதன் கடினமான பகுதிகளையும் எதிர்கொண்டேன். ஐபிஎல்லால் அனைத்து விதமான எமோஷன்களையும் எதிர்கொண்டேன். இனி விளையாட வேண்டாம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கூட முடிவெடுத்தேன்” என கூறியிருக்கிறார்.