வருணை விட அவர் திறமைசாலியா.? இந்த விஷயத்தில் கம்பீர் செஞ்சது எனக்கு புரியல.. இந்திய முன்னாள் வீரர் ஆதங்கம்

0
129

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வருகிற 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு தொடர்களுக்கும் இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. ஒரு நாள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த இருக்கிறார். இந்த சூழ்நிலையில் டி20 தொடரில் இடம் பிடித்திருக்கும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை.

சமீபத்தில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ், வருணை ஒரு நாள் தொடரில் சேர்க்காதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு நாள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இருந்திருக்கக் கூடாது. அதற்கு பதிலாக எனது கேள்வி என்னவென்றால், ஒருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இருந்திருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் விளையாட்டு எங்கு விளையாடப்படுகிறது என்பதை நான் பொருட்படுத்தாமல் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்திருப்பேன். குறைந்தபட்சம் முகமது சமி போன்ற உயர்தர வீரராக இருந்தால் பரவாயில்லை.

இதையும் படிங்க:உங்க 2 பேருக்கும் கட்டம் கட்டிட்டாங்க.. தப்பிக்க இது தான் வழி.. இர்பான் பதான் கருத்து

டி20 தொடருக்கு வருணை தேர்வு செய்துள்ளீர்கள். ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் நான்கு ஓவர்களுக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்துள்ளீர்கள். ஆனால் அதே சூழ்நிலைகளில் அவரால் 10 ஓவர்கள் முழுமையாக வீச முடியாது என்று கூறுவது முரண்பாடாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -