2 உலக கோப்பை ஜெயிச்சாலும்.. ரோகித்தால் அவங்க இடத்தை அடைய முடியாது – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
23

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் ஒரு நாள் தொடரில் மட்டுமே விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் ரோஹித் சர்மா குறித்து சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை எடுத்துக் கொண்டால் அதில் இந்திய வீரர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிரிக்கெட் விளையாடத் துவங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். அதற்குப் பிறகு கிரிக்கெட் விளையாட துவங்கிய சச்சின் டெண்டுல்கர், உலகின் சூப்பர் ஸ்டார் வீரராக மாறினார்.

அதற்கு அடுத்த தலைமுறையாக வந்த விராட் கோலி, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். இந்த வரிசையில் விராட் கோலி காலகட்டத்தில் உருவாகிய ரோஹித் சர்மாவும் தலைசிறந்த வீரராக இருக்கும் நிலையிலும், அவரால் சிறந்த பேட்ஸ்மேன் வீரர்களின் பட்டியலின் வரிசையில் அந்த இடத்தை அடைய முடியாது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நாங்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை பற்றி பேசுவதால் ரோகித் சர்மா அனைத்து காலத்திலும் சிறந்த இந்திய பேட்டிங் பட்டியலில் இருக்கும் வீரராக பொருந்த முடியவில்லை. ரோஹித் சர்மா அந்த இடத்தை பிடிக்கவில்லை” இன்று தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:8வது இடத்தில் பேட்டிங் வராது.. நான் சொல்ற மாதிரி செஞ்சா.. இந்திய அணி ஈஸியா ஜெயிக்கும் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஐடியா

என்னதான் இரண்டு உலகக் கோப்பைகளை வாங்கி கொடுத்து, உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தாலும், ரோகித் சர்மாவால் ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் இருக்க முடியவில்லை என ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் ரோகித் சர்மா கேப்டன் ஆன பிறகு தான் தனது சொந்த சாதனைகளுக்காக விளையாடாமல் அணியின் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகிறார் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் அவர் சிறந்த வீரர்களில் ஒருவரே என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -