கம்பீர் செஞ்ச அந்த ஒரு தப்புதான்.. இந்திய அணி தோக்குறதுக்கு முக்கிய காரணம் – பாக் பசித் அலி கருத்து

0
232
Basit

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு கம்பீரின் ஒரு முக்கியமான திட்டரீதியான தோல்விதான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைந்தது. இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுத்த நிலையில் அதை துரத்திய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

மாறிய ராஜ்கோட் ஆடுகளம்

பொதுவாக குஜராத் ராஜ்கோட் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. எனவே நேற்றைய போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் சுழலுக்கு சாதகம் இருந்தது ஆச்சரியப்படுத்தியது.

மேலும் பொதுவாக டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது எளிதானதாகவும், இந்தியாவில் போட்டியின் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், இரண்டாவது பேட்டிங் செய்வதையே அனைத்து அணிகளும் விரும்புகின்றன. இந்திய அணியும் நேற்று டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யவே முடிவெடுத்தது.

- Advertisement -

கம்பீரின் திட்டரீதியான தோல்வி

இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “பவர் பிளேவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி பவர் பிளேவில் 51 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது 200 ரன்கள் எடுக்கும் ஆடுகளம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கம்பீர் தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாய தவறு ஒன்றை செய்தார். இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அவர் மீண்டும் இரண்டாவதாக பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு தான் அதிகபட்ச சாதகமாக இருந்தது. இதை அவர் தவறவிட்டார்”

இதையும் படிங்க : 330/2.. கவாஜா சதம்.. ஸ்மித் ஸ்பெஷல் சாதனை சதம்.. இலங்கை அணியை திணறவிட்ட ஆஸி – முதல் டெஸ்ட்

“தற்போது இந்த தொடர் இரண்டுக்கு ஒன்று என சுவாரசியமாகிவிட்டது. ஒருவேளை இந்த போட்டியை இந்தியா வென்று இருந்தால் இந்நேரத்திற்கு தொடரை கைப்பற்றி இருக்கும். முகமது ஷமி அருமையான முறையில் பழையபடி திரும்பி வந்திருக்கிறார். அவர் அச்சமற்ற முறையில் ஓடிப் பந்து வீசினார். மேலும் அவருடைய சீம் வழக்கம்போல் நேராக சிறப்பாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -