இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம்பெறாத நிலையில் அவர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
குல்தீப் யாதவ் இல்லை
இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இந்திய அணி பேட்டிங்க்கு முக்கியத்துவம் கொடுத்து எட்டாவது வரிசை வரை ஆல் ரவுண்டர் வீரர்களை தேர்வு செய்தது. இதனால் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடினர். இந்த சூழ்நிலையில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கப்படவில்லை.
இது பல முன்னாள் வீரர்கள் இடையே பலவகையான விமர்சனங்களை பெற்று தந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இப்போது உள்ள இந்திய அணியின் நிலமையை பார்க்கும் போது குல்தீப் யாதவ் அஸ்வின் போல பேட்டிங்கில் தன்னால் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். அப்போதுதான் இந்திய அணியில் அவருக்கான இடம் கிடைக்கும் என்பது குறித்தும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அஸ்வின் மாதிரி இருங்க
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குல்தீப் யாதவை 11வது இடத்தில் சேர்த்து உங்கள் பேட்டிங் இன்னும் ஒரு நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரசிகர்கள் யாரும் அணி நிர்வாகத்தையோ அல்லது கேப்டனையோ பின் தொடர மாட்டார்கள். குல்தீப் யாதவ் தனது பந்து வீச்சு திறமையுடன் பேட்டிங்கில் தனக்கு உரிய மரியாதையை கொண்டிருக்கிறார். அது அவரது தரப்பில் இருந்து நிறைய முயற்சி தேவைப்படும்.
இதையும் படிங்க:விராட் கோலி போனா போகட்டும்.. கவலைப்பட ஒன்னும் இல்ல.. இதுதான் காரணம் – கங்குலி பேட்டி
ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 5-6 சதங்கள் அடித்து இருக்கிறார். லோயர் மிடில் பேட்டிங் ஆர்டரில் 8 அல்லது ஒன்பதாவது இடத்தில் இதை செய்ய முடிந்தால் நிச்சயமாக அதிக டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியும்” என்பது எனது கருத்தாகும் என உத்தப்பா கூறியிருக்கிறார். அதாவது குல்தீப் யாதவ் அஸ்வின் போல பேட்டிங்கில் பங்களிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாட முடியும் என உத்தப்பா பேசியிருக்கிறார்.






