17 வருடங்களாக ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை முதன்முறையாக கோப்பையை வெற்றி பெற்று அசத்தியது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் ஆர்சிபி வீரர் ஒருவர், தான் முதலில் பெங்களூர் அணிக்காக விளையாட மாட்டேன் என்று மறுத்து விட்டதாக சில சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில், பல முன்னணி இந்திய வீரர்கள் அதில் கலந்து கொண்டு தங்களது அணிகளை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதில் முதல் முறையாக மும்பை அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா அதற்கு அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டார்.
2008ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய அவர், அந்த தொடரில் 14 போட்டிகளில் 320 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் எதற்காக ஆர்சிபி அணிக்கு முதலில் விளையாட மறுத்ததாக உத்தப்பா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “மும்பை நிர்வாகம் ஜாகீர் கான் பெங்களூரில் இருந்து மும்பை அணிக்கு அழைத்து வர விரும்பியது. என்னையும் மனிஷ் பாண்டேவையும் பெங்களூர் அணிக்கு அனுப்ப விரும்பினார்கள். அது இரண்டு உரிமையாளர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்று நினைக்கிறேன் ஆனால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் கிரிக்கெட் மீது இருந்த அன்பிற்காக மட்டுமே விளையாடினேன். கிரிக்கெட்டில் விசுவாசம் என்பது மிகப் பெரிய விஷயமாகும்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி.. முன்னாள் கேப்டன் அதிரடி நீக்கம்.. சந்தர்பால் மகனுக்கு இடம்
நான் மும்பை அணிக்கு விளையாடிய போது நான் உண்மையைச் சேர்ந்தவன் என்று மட்டுமே உணர்ந்தேன். இதை விட்டு நான் எங்கும் சொல்ல மாட்டேன் மும்பை அணி வெற்றிபெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பினேன். அதுதான் என் அப்போதையமான நிலை, ஆனால் நான் மாற்றப் போகிறேன் என்று சொன்னபோது முதலில் நான் மறுத்து விட்டேன். நான் மாற விரும்பவில்லை” என்று கூறினேன் என்று பேசி இருக்கிறார்.






