7 வருஷமா இந்திய டீம்ல இல்லாத இவருக்கு.. சாம்பியன்ஸ் டிராபியில் இடம் தரணும்.. இப்ப உலக சாதனை வேற படச்சிருக்காரு – உத்தப்பா கோரிக்கை

0
90
Robin Uthappa about Champions Trophy

7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் விளையாடிய கருண் நாயருக்கு, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா வலியுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது. இந்த சூழலில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

- Advertisement -

5 போட்டிகளில் கருண் நாயர் 4 சதம்

தற்போது இந்திய அணியில் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கருண் நாயர் இடம்பெறுவதற்கான தகுதியான நபராக திகழ்ந்திருக்கிறார். ஏனென்றால் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 போட்டிகளில் விளையாடி நான்கு சதம் அடித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து 542 ரன்கள் குவித்து கருண் நாயர் உலக சாதனை படைத்திருக்கிறார். 112,44, 163* ,111*,112 ஆகிய ரன்களை கருண் நாயர் நடப்பு தொடரில் அடித்து இருக்கிறார். இதன் மூலம் கருண் நாயர் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கடைசியாக கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு விளையாடினார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் தாங்க

அதன் பிறகு தொடர்ந்து கருண் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதில்லை. 2016 ஆம் ஆண்டு இறுதியில் கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். ஆனால் இவ்வளவு அபாரமாக விளையாடிய வீரரை ஏழு ஆண்டுகளாக இந்திய அணியில் சேர்க்கப்படாதது புரியாத புரிதாக இருக்கிறது.

இந்த நிலையில் கருணாயர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, “கருண் நாயரை யாராலும் தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் அபாரமாக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தமக்கு இடம் வேண்டும் என்பதை தனது பேட்டிங் மூலம் கருண் நாயர் சொல்லியிருக்கிறார்”.

இதையும் படிங்க: வெறும் 4 விக்கெட்.. 53 வருட இந்திய வீரரின் சாதனையை.. முறியடிக்க பும்ராவிற்கு பொன்னான வாயப்பு.. முழு விவரம்

“இவ்வளவு விளையாடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றால் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தால் மட்டுமே கருண் நாயர் போன்ற வீரர்கள் விளையாட முடியும். ஆனால் கருண் நாயருக்கு 33 வயதாகி விட்டதால் தேர்வு குழுவினர் அவருக்கு வாய்ப்பு தர மாட்டார்கள் என தெரிகிறது.

- Advertisement -