இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட அதே நிலைமை இங்கிலாந்து அணிக்கு ஏற்படக்கூடும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடரானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் மெதுவாக ஓவர்கள் வீசியதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் இது சம்பந்தமாக தனது கருத்துக்களை கூறியிருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இங்கிலாந்து அணி இதே தவறை திருப்ப செய்தால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டாம் இடத்தை இழந்து நியூசிலாந்து அணி தகுதி பெற்றது போல இந்த சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு அதே நிலைமை ஏற்படக்கூடும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறும் போது ” உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகழ்ந்தது போல இது வேதனை அளிக்கிறது. அவர்கள் இந்திய அணிக்கு எதிராக மெதுவான ஓவர் வீதத்தை கொண்டிருந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்தை இழந்தனர். அப்போது நியூசிலாந்து அணி அந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையெல்லாம் இங்கிலாந்து அணி முழுமையாக உணர வேண்டும். சில ஆட்டங்களில் இங்கிலாந்து அணி இதனை ஈடு செய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:ஜடேஜா வெறும் 3 விக்கெட் தான் எடுத்து இருக்காரு.. இந்திய அணிக்கு பெரிய தலைவலி காத்திருக்கு.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து
இருப்பினும் ஓவர்ரேட் விகிதத்தைப் பற்றி சிந்திப்பதை விட வெற்றி பெறுவதைப் பற்றி அதிக அளவில் சிந்திக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தினால் இதனை சரி செய்ய முயற்சிக்கலாம். அந்த இரண்டு புள்ளிகளையும் நீங்கள் எப்படி பெறுவீர்கள் என்று பாருங்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். நீங்கள் வெற்றி பெற ஆரம்பித்தால் இந்த விஷயம் சரியாகிவிடும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.