2017ல் அவர் செஞ்ச சாதனையை.. 2025ல் அவரே முறியடிப்பார்.. இந்திய வீரரை பாராட்டும் பார்த்தீவ் பட்டேல்

0
49

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னால் வீரரான பார்தீவ் பட்டேல் இந்த டெஸ்ட் தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இதன் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தில் துவங்கியது. இதன்படி டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

இந்த சூழ்நிலையில் தங்களது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 114 பந்துகளை எதிர் கொண்டு 53 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் என பார்த்தீவ் பட்டேல் கேஎல் ராகுலுக்கு இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமையும் எனவும், அவரது சாதனையை அவரே முறியடிப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “கேஎல் ராகுல் இப்போது கட்டுப்பாடு மற்றும் நிதானத்தோடு இருக்கிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்காக அவர் அடித்த சதம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனென்றால் இவ்வளவு ரன்கள் எடுத்த பிறகு நீங்கள் ஒரு டெஸ்ட் தொடருக்கு செல்லும்போது அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையும் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டு அவருக்கு இரண்டாவது சிறந்த ஆண்டாக அமைகிறது. இந்த ஆண்டு அவர் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் அவரது கடந்த கால சாதனையை முறியடிப்பார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:சாய் சுதர்சன தூக்கிட்டு திலக்கை கொண்டு வாங்க.. இந்த புள்ளி விபரம் போதாதா? – கொதிக்கும் ரசிகர்கள்

மேலும் அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து தனது அற்புதமான பார்மை தொடர்ந்து விளையாடுகிறார். அந்த தொடருக்கு முன்பாக அவரது பார்ம் குறித்து சில கவலைகள் இருந்தன. ஆனால் அவர் பொறுப்பு எடுத்து விளையாடினார் ஒரு அணி மாற்றத்தை சந்திக்கும் போது அதன் மூத்த வீரர்கள் முன்னேறி விளையாடுவது அவசியமாகும். அதைத்தான் கேஎல் ராகுல் இப்போது செய்து வருகிறார்” என்று பேசி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு கே எல் ராகுல் ஒரு சீசனில் 633 ரன்கள் எடுத்தார் அது அவரது அதிகபட்ச ரன்னாகும். இந்த ஆண்டு 602 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -