சாய் சுதர்சன தூக்கிட்டு திலக்கை கொண்டு வாங்க.. இந்த புள்ளி விபரம் போதாதா? – கொதிக்கும் ரசிகர்கள்

0
83
Sai

இந்திய டெஸ்ட் அணிகள் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவை சேர்க்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 19 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சாய் சுதர்சன் மோசமான ஷாட் விளையாடி ஏமாற்றம் தரும் வகையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அகர்கர் தந்த விளக்கம்

சாய் சுதர்சன் உள்நாட்டு டெஸ்ட் ஆவரேஜ் மிகவும் குறைவாக இருந்த போதிலும் கூட அவர் எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவெடுப்பதற்கான திறமைகளை கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தரப்பட்டு இருப்பதாகவும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

சாய் சுதர்சன் இங்கிலாந்து தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதத்துடன் மொத்தம் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அவர் ஆட்டம் இழக்கும் விதம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் எல்லா கண்டிஷனிலும் போராடி ரன் எடுக்கக்கூடிய திலக் வர்மாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

புள்ளி விபர ஒப்பீடு?

சாய் சுதர்சன் 34 முதல் தரப் போட்டிகளில் 58 இன்னிங்ஸ்களில் 2345 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 8 அரைசதம் மற்றும் 8 சதங்கள் அடக்கம். அதே சமயத்தில் இவருடைய ரன் ஆவரேஜ் 40 ரன்னாக இருக்கிறது. திலக் வர்மா 22 முதல் தர போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் 1562 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 5 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் அடக்கம். மேலும் இவருடைய ரன் ஆவரேஜ் 52.06 ரன் என சாய் சுதர்சனை விட மிக அதிகமாக இருக்கிறது.

இதையும் படிங்க : ILT தொடர் ஏலத்தில் யாரும் வாங்காதது.. எனக்கு மகிழ்ச்சியா இல்ல.. இதுதான் நடந்தது – அஸ்வின் விளக்கம்

திலக் வர்மா ஆடுகளத்தன்மை மற்றும் ஆட்ட சூழ்நிலை இரண்டையும் தாமாகவே புரிந்து புத்திசாலித்தனமாக விளையாட கூடியவர். இதன் காரணமாக தடுமாறி வரும் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -