பாகிஸ்தான் அணியை குறைவா நினைக்காதீங்க.. இதை மட்டும் அவங்க சரி பண்ணினா போதும் – எச்சரிக்கும் நவ்ஜோத் சிங் சித்து

0
319

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.

தற்போது முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியை யாரும் குறைவாக எடை போட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி விளையாட்டை தாண்டி சில அரசியல் காரணங்களால் அது ஒரு விளையாட்டு போராகவே பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கம் போலவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த டி20 தொடரை வெற்றிக் கணக்குடன் தொடங்கியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்தியா பலமாக காணப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போட்டி குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அணியை குறைவாக எடை போட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். விளையாட்டை பொருத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி என்றால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

- Advertisement -

இதனால்தான் இந்திய அணி போட்டியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அது உலகக்கோப்பைக்கு சமமான வெற்றியாக கருதப்படும்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக இருக்கிறது என்பது உண்மை. அவர்கள் டி20 தொடரை டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:நானே ஐடியா தரேன்.. பாகிஸ்தான் கூட இந்தியா இந்த தப்பை மட்டும் செய்யாதிங்க – பாக் கம்ரன் அக்மல் பேட்டி

இதுவே பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி, தற்போது அமெரிக்கா போன்ற சிறிய அணியுடன் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த பேட்டிங் நுட்பத்தை சரி செய்து விட்டால் அவர்களும் வலிமையாக மாறி விடுவார்கள். இந்திய அணியும் தற்போது வலுவாகவே உள்ளது” என்று கூறி இருக்கிறார்.