இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி முதலில் சில போட்டிகளில் நன்றாக விளையாடி இருந்தாலும் அதற்குப் பிறகு காயத்துடன் மீது உள்ள போட்டிகளை விளையாடி முடித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்கு பிறகு அவருக்கு சரியான மாற்று வீரராக இவர் தான் இருப்பார் என இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எம் எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரது தலைமையில் சென்னை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாகவே சிஎஸ்கே ரசிகர்கள் தோனி மீது பெரிய அளவில் மதிப்பும், மரியாதையும், அன்பும் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓய்வு பெற்று இருக்க வேண்டிய நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வெளியேறினால் அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான மாற்று அணியாக இருக்கும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவருமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். சஞ்சு சென்னை அணிக்கு ஒரு சிறந்த பிராண்ட் ஆக இருப்பார் எனவும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சஞ்சு சாம்சன் ஒரு புத்திசாலித்தனமான வீரர். சென்னையில் மிகவும் பிரபலமான ஒரு வீரர். அவருக்கு சென்னையில் நல்ல பிராண்ட் இமேஜ் இருக்கிறது. நான் சொன்ன மாதிரி அவர் சென்னை அணிக்காக விளையாட விரும்பி இந்தப் பக்கம் வந்தால் நான் தான் முதல் ஆளாக அவரை தேர்ந்தெடுப்பேன்.
இதையும் படிங்க:கோலி மீது இவ்வளவு மரியாதையா? சிராஜ் செய்த காரியத்தை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி.. இதை பாருங்க
எம்எஸ் தோனிக்கு சரியான மாற்று வீரராக அவர் இருப்பார். தோனி ஒருவேளை இந்த சீசனில் விளையாடிவிட்டு அடுத்த சீசனில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால் அதற்குப் பிறகு ஒரு சுமூகமான மாற்றம் சென்னை அணிக்கு கிடைக்கும். இதில் சென்னை அணிக்கு ருத்ராஜ் கேப்டன் ஆக தொடர்ந்தால் அவரே திரும்ப சென்னை அணிக்கு கேப்டனாக தொடர வேண்டும்” என ஸ்ரீகாந்த் பேசி இருக்கிறார்.