நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது தொடர் தோல்வியை பதிவு செய்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சன்ரைசர்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சன் ரைசர்ஸ் அணியின் பிரச்சனை
இந்த சீசனை பொறுத்தவரை முதல் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் இதே மாதிரியான மனநிலையோடு விளையாடி மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்திருக்கிறது. இரண்டாவது தோல்விக்கு பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தங்கள் அணி அதிரடியாக விளையாடும் மனநிலையை மாற்றிக் கொள்ளாது எனவும், தொடர்ந்து இதே மாதிரியான முறையில் விளையாடி வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
ஆனால் பேட்டிங்கை விடவும் தற்போது பந்து வீச்சு சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் முகமது சமி, காயத்திலிருந்து வந்திருக்கும் நிலையில் அவராலும் பழைய நிலையில் பந்து வீச முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சன்ரைசர்ஸ் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்தேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமான தாக்குதல்களில் ஒன்றாகும். அவர்களது பந்து வீச்சு வரிசையில் ஒரு சிறப்பான பவுலரை நான் பார்க்கவில்லை. இந்த வரிசையில் ஷமி நல்ல பவுலர் மட்டுமே, ஆனால் அவர் ஆபத்தானதவர் கிடையாது. அவர் தற்போது பழைய நிலையில் இல்லை என்பது தான் உண்மை.
இதையும் படிங்க:பணம் கொடுத்து உங்களைப் பார்க்க வராங்க.. தயவு செஞ்சு அவர்களை ஏமாற்றாதீங்க – வீரேந்திர சேவாக் ஆதங்கம்
இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள், பல ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு தற்போது வயதாகி விட்டது அதை உணர வேண்டும். இப்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் எளிதாக விளையாட முடிகிறது. கமிந்து மெண்டிஸ் ஒரே ஓவரில் விக்கெட் வீழ்த்தினாலும், ஜீஷான் அன்சாரி மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்திய போதிலும் அவர்கள் 4 ஓவர்கள் மட்டுமே சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். இடது கை வீரர்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தயங்குகின்றனர். பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணுகு முறையோடு ஒரு தைரியமான கேப்டன் என்று நினைத்தேன். ஆனால் அந்த விஷயத்தில் நான் ஏமாற்றம் அடைந்தேன்” என்று கூறி இருக்கிறார்.






