இந்திய அணியில் இவர் ஓவர்ரேட்டட் கிரிக்கெட்டர்.. இவருக்கு பதில் ருதுராஜ் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தாங்க – ஸ்ரீகாந்த் பேட்டி

0
14
Ruturaj and Sai Sudharsan

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஒரு ஓவர்ரேட்டட் வீரர் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் குற்றம்சாட்டி இருக்கிறார். கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவைத் தவிர வெளிநாட்டு மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடித்தது கிடையாது.

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா மீது அனைவரின் கவனமும் இருப்பதால் கில் தப்பித்து வருகிறார். ஆனால் கில் மோசமான ஒரு ஆட்டத்தை விளையாடி இருக்கிறார். 13, 20, 1,28, 31 ஆகிய ஸ்கோர்களை தான் இந்த தொடரில் அடித்து இருக்கிறார்.

- Advertisement -

கில்லுக்கு மட்டும் ஏன் வாய்ப்பு?:

இதனால் கில் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், “நான் ஆரம்பத்தில் இருந்தே கில் ஒரு ஓவர்ரேட்டட் வீரர் என்று சொல்லி வருகிறேன். என் பேச்சை யாரும் கவனிப்பதில்லை. கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.ஆனால் கில்லுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வாய்ப்பை தருகிறீர்கள்.

கில் மட்டும் என்ன ஸ்பெஷல்? கில்லுக்கு நீங்கள் தரும் வாய்ப்பை ஏன் சூரிய குமார் யாதவுக்கு கொடுத்திருக்கக் கூடாது. சூரிய குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த தொடக்கம் அமையவில்லை. ஆனால் அவரிடம் நல்ல யுக்தி மற்றும் திறமை இருக்கிறது. ஆனால் சூரிய குமார் யாதவ் வெள்ளை நிற கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வருவார் என்று தேர்வு குழுவினர் அவர் மீது முத்திரை குத்தி விட்டார்கள்.

- Advertisement -

ருதுராஜ், சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுங்க

அப்படி இருக்கும்போது நீங்கள் புதுமையான வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஏன் ருதுராஜ்க்கு வாய்ப்பு தரக்கூடாது. ருதுராஜ் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் தேர்வு குழு ருதுராஜை கண்டு கொள்வதே கிடையாது.

இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்திய ஏ அணி தொடர்களில் எல்லாம் பிரமாதமாக விளையாடி வருகிறார். இது போன்ற திறமை வாய்ந்த வீரர்களை தான் தேர்வுக்குழு அணியில் எடுக்க வேண்டும். ஆனால் ஒரே விதமான வீரர்களை தேர்வு செய்து பிசிசிஐ வட்டமடித்து வருகிறது.

கில்லுக்கு பத்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் ஒரு இன்னிங்ஸில் ஸ்கோர் அடித்து விடுகிறார் மற்ற ஒன்பது இன்னிங்ஸ்களில் சொதப்புகிறார். இப்படி விளையாடி தான் இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். இந்திய ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் ரன் அடிக்கலாம்.

இதையும் படிங்க: வெறும் 7.1 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.. 10 வீரர்கள் மட்டுமே வைத்து ஆடிய பாகிஸ்தான் அணி.. 2வது டெஸ்ட்

ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளத்தில் ரன் குவிப்பவர்களை தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். அப்படி பார்க்கும்போது கே எல் ராகுல் இந்த தேர்வில் பாஸ் ஆகிவிட்டார்” என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

- Advertisement -