வெறும் 7.1 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.. 10 வீரர்கள் மட்டுமே வைத்து ஆடிய பாகிஸ்தான் அணி.. 2வது டெஸ்ட்

0
1379

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெறும் 7.1 ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இதில் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெறும் 10 வீரர்களை மட்டுமே வைத்து விளையாடி உள்ள நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது.

அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. இந்த இன்னிங்ஸில் கேப்டன் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி 145 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர்.

- Advertisement -

10 வீரர்களை மட்டுமே வைத்து ஆடிய பாகிஸ்தான்

பாபர் அசாம் மட்டுமே அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் குறிப்பாக கடைசி வரிசை பேட்ஸ்மேன் சயீம் அயூப் ஏற்கனவே காயத்தால் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் அணி வெறும் 10 பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்து விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 61 ரன்கள் நிர்ணயித்தது.

இதையும் படிங்க:கவாஸ்கர் பெயரில் தொடரை நடத்தி.. அவருக்கு இப்படி செய்வது நியாயமே இல்லை – பிசிசிஐ தலைவர் ராஜிவ் சுக்லா பேட்டி

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய தொடக்க வீரர்கள் பெடிங்காம் 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் என 47 ரன்களை 156 ஸ்ட்ரைக் கிரேட்டில் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரம் 14 ரன்கள் எடுக்க இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி வெறும் 7.1 ஓவரில் 61 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

- Advertisement -