விராட் செஞ்சது தப்பு.. நாம ஆடும்போது கில்கிறிஸ்ட் ஹேடன் என்ன செஞ்சாங்க தெரியுமா – இர்பான் பதான் பேட்டி

0
964

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி கான்ஸ்டாஸ் மோதல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் போட்டியின் நடுவே விராட் கோலி மைதானத்திற்கு நடுவே நடந்து சென்று தனது கையுறைகளை சரி செய்து கொண்டிருந்த சாம் கான்ஸ்டாஸ் மீது மோதினார்.

இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் விராட் கோலி ஒரு இளம் வீரருக்கு செய்தது தவறு என்றும், அதை கோலி தவிர்த்து இருக்க வேண்டும் என்று சீனியர் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் நாம் இளைஞர்களாக விளையாடிய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இப்படித்தான் நம்மை செய்தார்களா என்று விராட் கோலியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

அவர் செய்திருந்தால் ஏற்றுக் கொள்வோமா

இதுகுறித்து இர்பான் பதன் கூறும்பொழுது “நீங்கள் தொடர்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வீரரை தொடர்பு கொள்ள முடியாது. ஆடுகளத்தில் நீங்கள் உங்களது ஆக்ரோசத்தை காட்டலாம். நமது அணி வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால் அவர் ஒரு 19 வயது சிறுவன். நாம் 19 வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது கில்கிரிஸ்ட், ஹேடன் அனைவரும் ஸ்டம்புக்கு பின்னால் இருந்து சத்தம் போட்டார்களே தவிர இதுபோன்று ஒரு நாளும் செய்ததில்லை. எனவே கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் இதைத் தவிர்த்து இருக்கலாம்.

இதையும் படிங்க:4வது டெஸ்ட்.. கில்லை கழட்டி விட முக்கிய காரணம் இதுதான்.. உண்மை அது இல்ல – அபிஷேக் நாயர் பேட்டி

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது ஆஸ்திரேலியாவின் சீனியர் வீரரான ஸ்டீவ் ஸ்மித் நமது அணியில் 19 வயது சிறுவன் ஒருவன் அறிமுகமாகி இதேபோன்று அவர் வந்து தள்ளி இருந்தால் இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் அதை நிச்சயம் விரும்ப மாட்டோம். எனவே நியாயம் அனைவருக்கும் ஒன்றுதான்” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் விராட் கோலி இதை வேண்டுமென்று செய்தாரா?அல்லது எதிர்பாராமல் நடந்ததா? என்று தெரியவில்லை என சாம் கான்ஸ்டாஸ் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -