சச்சின் கங்குலி கூட இதை செஞ்சது இல்ல.. இந்த கால பிளேயர்ஸ்க்கு எதுக்கு இவ்ளோ சலுகை – ஹர்பஜன் சிங் கேள்வி

0
112

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பிசிசிஐ சில கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய வீரர்களுக்கு விதித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்த விதிகள் குறித்து சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ விதித்த விதிமுறைகள்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தோல்வியும், அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்கள் அனைவரும் போட்டி முடியும் வரை ஒன்றாக ஒரே பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் எனவும், குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுதல் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அது மட்டுமல்லாமல் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தனியாக மேலாளர், சமையல்காரர் என தனிப்பட்ட வசதிகள் எதுவும் செய்து கொள்ளக் கூடாது எனவும் அணி வீரர்களுக்கு என பொதுவான சமையல்காரரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சில விதிகள் விதித்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பிசிசிஐ அறிவித்த 10 விதிகளில் 9 விதிகள் முன்னரே இருந்தவை தான் எனவும் இதை யார் மாற்றியது என்பது தான் எனது கேள்வி என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விதிகளை யார் மாற்றியது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முதலில் நான் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். பிசிசிஐ விதித்ததாக தெரிவித்த பயணக் கொள்கை ஆவணத்தை படிக்கும் போது நான் இந்தியாவுக்காக விளையாடிய சமயத்தில் என்ன விதிகள் இருந்ததோ அதே விதிகள் தான் தற்போதும் இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் காலம், ஒரே ஓட்டலில் தங்குவது என 10 விதிகளில் 9 விதிகள் நான் விளையாடும் போது இருந்தவை தான்.

இதையும் படிங்க:கோலி பெயரை சொல்லனும்னு மக்கள் நினைக்கிறாங்க.. ஆனா ஆர்சிபில இவர் கிட்டதான் கத்துக்குறேன் – ஜித்தேஷ் ஷர்மா பேட்டி

எனது கேள்வி என்னவென்றால் நான் விளையாடும் காலத்தில் இருந்தே உள்ள விதிகளை தற்போது யார் மாற்றினார்கள் என்பது, நாங்கள் சில நேரங்களில் மோசமான கிரிக்கெட்டை விளையாடுவதால் தோற்று இருக்கிறோம். எனவே இதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து பார்க்க வேண்டும். மேலும் நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் சச்சின், கும்ப்ளே, டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் மூன்று நாட்களில் போட்டி முடிவடைந்தாலும் அடுத்த போட்டி நடைபெற இடத்திற்கு செல்வார்களே தவிர அவர்களது சொந்த ஊருக்கு செல்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -