2 உலகக்கோப்பைகள் அல்ல.. என்னால் மறக்க முடியாதது அந்த 643 நிமிடங்கள்தான்- கவுதம் கம்பீர் பேட்டி

0
116

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான கௌதம் கம்பீர், 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர்.

ஆனால் இந்த இரண்டு உலகக் கோப்பைகளையும் தாண்டி தனது வாழ்நாளில் மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி குறித்து கௌதம் கம்பீர் சில சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான இடது கை பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர், இந்திய அணிக்காக பல நல்ல தொடக்கங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். டி20 கிரிக்கெட், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் இடம் பிடித்து இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் 75 ரன்கள், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 122 பந்துகளில் 97 ரன்களும் இந்திய அணி அந்த இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைந்தன. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு இவரது ஆலோசனையில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. மேலும் தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் கம்பீர் தனக்கு விருப்பமான கிரிக்கெட் நிகழ்வு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறும் பொழுது “எனக்குப் பிடித்த கிரிக்கெட் நிகழ்வு பற்றி கூறினால் உலகக் கோப்பை பற்றியதாக இருக்காது.

என்னைப் போன்ற பொறுமையே இல்லாத ஒருவன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை காப்பாற்ற இரண்டரை நாட்கள் பொறுமையாக விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஏனென்றால் அது எனக்கு சுத்தமாக செட் ஆகாத ஒரு நிகழ்வு. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் இந்தியாவை காப்பாற்ற இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் பள்ளியில் கூட 2 1/2 நாட்கள் நான் பேட்டிங் செய்து எந்த கிரிக்கெட் போட்டியும் விளையாடியது இல்லை.

இதையும் படிங்க:நேத்து சூர்யா பண்ணுன அந்த ஒரு சம்பவம்.. ரிச்சர்ட்ஸை கண்ணு முன்னாடி கொண்டு வந்துச்சு.. நவ்ஜோத் சிங் புகழாரம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது நாளில் தேநீர் இடைவெளியின் போது எனது பேட்டிங் பார்ட்னர் விவிஎஸ் லக்ஷ்மன் என்னிடம், ‘உனக்கு நினைவிருக்கிறதா? நீ இரண்டு மணி நேரம் எதுவும் பேசாமல் இருக்கிறாய்’ என்று கூறினார். அப்போதுதான் நான் எனது ஆறுதல் நிலையை அடைந்தேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. நான் பேட்டிங் செய்த 643 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று கூறி இருக்கிறார். 2009ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது நாளில் பேட்டிங் களமிறங்கி 137 ரன்கள் குவித்து ஐந்தாவது நாளில் ஆட்டம் இழப்பார். தோல்வியில் இருந்த அந்தப் போட்டி இவரின் மூலம் டிராவானது.

- Advertisement -