இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து இருக்கிறது. இது மோசமான தோல்வியாக இந்திய அணிக்கு இருந்தாலும் இரண்டு நல்ல விஷயங்கள் இன்று அணிக்கு சாதகமாக அமைந்திருப்பதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்தியா டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. பின்னர் அனுபவ வீரர் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணி முதல் போட்டியில் டிரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி என்று ஒரு நாள் தொடரையும் இழந்திருக்கிறது.
அடுத்த வருடம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவின் பேட்டிங் யூனிட் பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இந்த தொடர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. எனவே இது முன்னேற்றம் காண வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக விளையாடியதும், அட்டாக் செய்து விளையாடுவதும் மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடக்க இடத்தில் அதிரடியாக விளையாடுவதோடு பேட்டிங்கை எளிது ஆக்குகிறார் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது “இந்தியா இலங்கை தொடரில் நடந்த நேர்மறையான விஷயம் என்னவென்றால் இந்தியா ஆல் ரவுண்டர்களோடு தைரியமாக அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடியது. இந்த விஷயம் நிஜமாகவே பாராட்டுக்குரியது. இரண்டாவது விஷயம் ரியான் பராக் லிமிடெட் வடிவ கிரிக்கெட்டில் அவரால் என்ன முடியும் என்பதை காட்டியிருக்கிறார். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயம் ஆகும்.
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகவும் அற்புதமாக உள்ளது. பவர் பிளேவில் அவர் பேட்டிங் ஆரம்பிக்கும் விதம் பின்னால் வருபவர்களுக்கு பேட்டிங்கை எளிதாக்குகிறது. ரோஹித் மிக அழகாக பேட்டிங் செய்கிறார். இந்த விஷயங்கள் என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயங்களாகும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:கம்பீர் தயவு செய்து அவரை விடாதிங்க.. அவர் ரொம்ப பாவம்.. பயன்படுத்துங்க – ஆகாஷ் சோப்ரா கோரிக்கை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைவான ஒரு நாள் போட்டிகளே இருக்கும் நிலையில், இந்த பலவீனங்களை சரி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






