கம்பீர் தயவு செய்து அவரை விடாதிங்க.. அவர் ரொம்ப பாவம்.. பயன்படுத்துங்க – ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

0
260
Akash

இந்திய அணி தற்போது திடீரென மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்ற மிகவும் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. இலங்கையணி 130 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த பொழுதும் கூட, அந்த அணியை 200 ரன்களுக்குள் இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

மேலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொண்டிருந்த பொழுதும் கூட, இந்திய அணியில் மூன்று பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடும், இப்படியான நிலை ஏற்பட்டது பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா மிக முக்கியமான தீர்வு ஒன்றை கூறியிருக்கிறார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால் சாகலை விளையாட வையுங்கள் என்று சொல்லுவேன். அவரிடம் என்னதான் பிரச்சினை உங்களுக்கு? முதலில் உலகக் கோப்பை தொடர்களுக்கு அவரை தேர்வு செய்யாமல் இருந்தீர்கள். பிறகு கடந்த உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்து விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்பொழுது அவரை இந்திய அணியிலும் சேர்க்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் இருக்கும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு திறமை வேண்டும். ஒரு அணி நல்ல துவக்கத்தை பேட்டிங்கில் பெற்ற பிறகு, அடுத்து அவர்கள் விக்கெட்டை இழக்க விரும்பவில்லை என்றால், மேற்கொண்டு ஆட்டத்தை நகர்த்தி பொறுமையாக விளையாடினால், அங்கு உங்களுக்கு விக்கெட் கைப்பற்றும் பந்துவீச்சாளர் தேவை.

இதையும் படிங்க : வெறும் 63 போட்டி.. ஜாக் காலிஸை தாண்டி.. ரபாடா புதிய சாதனை.. வரலாற்றில் தனி வீரராக பிரகாசமான வாய்ப்பு

அப்படி என்றால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் திறமை தேவை. இந்திய அணியில் இருக்கும் விரல் சுழல் பந்துவீச்சாளர்களை விட மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களான குல்தீப் மற்றும் சாகல் இருவரும் திறமையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் சாகலுக்கு வாய்ப்பு கொடுங்கள். தயவு செய்து அவருக்கான கதவை மூடி விடாதீர்கள். அவர் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -