பும்ராவை வைத்து இந்த தப்பை செய்யாதீங்க.. நானா இருந்தா அவரை விளையாட விடவே மாட்டேன் – இந்திய முன்னாள் வீரர்

0
8

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக செப்டம்பர் மாதம் முதல் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ் குப்தா சில முக்கிய யோசனைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்து வந்தது. அதற்குப் பிறகு தற்போது எட்டு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் விளையாடிய பிறகு அவருக்கு இந்த தொடரில் ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அவரை விளையாட வைக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அவரது பணிச்சுமை மேலாண்மை குறித்து இந்திய அணிக்கு சில முக்கிய யோசனைகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் குப்தா வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் பும்ராவை எப்படி கையாள்வேன் என்றால், இந்திய அணிக்கு முக்கியமாக இருக்கும் போட்டிகளில் அவரை விளையாட வைப்பது மற்றும் அவரது உடலுக்கு என்ன மாதிரியான ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு தகுந்த மாதிரியான வேலை செய்வதாகும். அவரை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். நிறைய கிரிக்கெட் விளையாடாத ஒருவரை நீங்கள் விரும்பவில்லை. ஒருபுறம் நீங்கள் அவரது பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டும். அதேசமயம் மறுபுறத்தில் சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு பெரிய ஆட்டங்களில் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் சுயநலமா ஆடனும்?.. முதல்ல நடந்த ரேஸே வேற.. மொத்தமா ஏமாத்திட்டாங்க – அஸ்வின் விமர்சனம்

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2027-ம் ஆண்டு வரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் உள்ளது. அப்போதுதான் இந்த விஷயம் கொஞ்சம் கடினமாக இருக்கும். நீங்கள் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை பற்றி பேசுகிறீர்கள். அதற்குப் பின்னர் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. எனவே இந்த விஷயம் தான் சற்று கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் அடுத்த தலைமுறை பந்துவீச்சாளர்கள் உருவாக்க கூடுதல் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -