ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பரத் அருண் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கான முக்கிய காரணத்தை கூறியிருக்கிறார்.
அஸ்வின் திடீர் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு ஜாம்பவானாக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு சரியாக அமையவில்லை. விக்கெட்டுகள் மற்றும் ரன்கள் பெரிதாக அடிக்காத நிலையில் அவருக்கு அது சுமாரான தொடராகவே அமைந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் அவருக்கு ஒரு பேக் அப் வீரராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது அவருக்கு காயத்தை உண்டாக்கி இருக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் பரத் அருன் கூறியிருக்கிறார்.
அவர் ஓய்வு பெற இதுதான் முக்கிய காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பெரிய ஜாம்பவானை புறக்கணித்து வாஷிங்டன் சுந்தர் என்கிற இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டது அஸ்வினுக்கு மனதில் வலியை உண்டாக்கி இருக்கலாம். இது அவருக்கு மனதில் பெரிய வேதனையை அளித்திருக்கும் கடந்த காலங்களில் கூட அஸ்வினை விட ரவீந்திர ஜடேஜா அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
இதையும் படிங்க:கம்பீரை தப்பா விமர்சனம் செய்யக்கூடாது.. அவரோட உண்மையான குணம் இதுதான் – ஹர்ஷித் ராணா பேட்டி
ஆனால் அஸ்வின் அதனால் பாதிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. ஆனால் இந்த முறை வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் தேர்வு செய்ய படாமல் போனது அவர் மனதில் காயத்தினை உண்டாக்கி இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். மேலும் சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் போன்ற ஒரு சிறந்த வீரர் இந்திய அணியில் இல்லாதது சுழல் பந்து வீச்சில் பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. அந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






