இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் மாதிரி அந்த டீமை நினைச்சா.. இந்திய அணி பயங்கர சிக்கலில் மட்டும் – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 58 ரன்கள் தேவைப்படுகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு அடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில், முதலாவது போட்டியில் வெற்றி பெற்று, இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கிறது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் வெற்றி பெற 58 ரன்கள் மட்டுமே தேவை. இதற்குப் பிறகு இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்று அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியை தயார் செய்தது போல தென்னாபிரிக்க அணிக்கும் எதிராக இதே மாதிரியான பந்துவீச்சை இந்திய அணியை தயார் செய்தால் அது இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணிக்கு அடுத்த சவால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் விளையாடி வரும் நிலையில் அங்கு ஒரு விக்கெட் தவிர மற்ற அனைத்தையும் சுழற் பந்துவீச்சாளர் வீழ்த்துகிறார்கள். தென்னாபிரிக்க வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடி வரும் நிலையில் அவர்களிடம் ஏற்கனவே மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே நீங்கள் ஒரு டஸ்ட் பவுலை தயாரித்தால் பொறியில் சிக்கிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் அமைதியா மட்டும் இருங்க.. உங்களுக்காக அந்த விஷயம் காத்துகிட்டு இருக்கு – முகமது கைஃப் பேச்சு

அதற்காக நீங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் வீரர்களை தயார் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களிடம் தரமான வேகப்பந்து வீச்சு வரிசை உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாடங்களைக் கற்றுக்கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறினாலும் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு சாம்பியன் அணிக்கு எதிராக மற்றும் அவர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து வந்த பிறகு இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by