ரோஹித் கம்பீர் என்ன செய்றீங்க.. பிசிசிஐ பிளேயர்ஸ்க்கு இதை செய்றது நியாயமே இல்லை – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
81

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதற்காக நடைபெற இருந்த இரண்டு பயிற்சி ஆட்டங்கள் பிசிசிஐயால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிற 22ஆம் தேதி முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட முதல் பயிற்சி ஆட்டமும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரண்டாவது பயிற்சி ஆட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பயிற்சி ஆட்டம் தரும் அனுபவம் வேறு எங்கு விளையாடினாலும் கிடைக்காது எனவும் வலைப்பயிற்சியில் விளையாடினாலும் வீரர்கள் காயமடைய வாய்ப்புண்டு என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வலைப்பயிற்சியின் போது கூட காயம் அடைய வாய்ப்பு உண்டு

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெற இருந்த முதல் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு பேட்ஸ்மேனுக்கு மையத்தில் நேரத்தை செலவழித்து பந்து மட்டையின் நடுவில் பட்டு பெறப்படும் உணர்வு வேறு எதிலும் கிடைக்காது. க்ரீசில் சிறிது நேரம் தங்கி பேட்டின் வேகம் மற்றும் எடுக்க கூடிய ஓட்டம் இவைகளை வேறு எந்த நிகர பயிற்சியும் தராது.

இதையும் படிங்க:நான் விரும்பிய மாதிரி இல்லை.. லக்னோ அணியில் இருந்து வெளியேற காரணமே இதுதான் – மனம் திறக்கும் கேஎல் ராகுல்

ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் ஒரு முக்கிய பேட்ஸ்மேனை காயப்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் நெட்ஸில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போதும் கூட காயமடைய வாய்ப்புகள் உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் பெறப்படும் அனுபவத்தை விட வலைப்பயிற்சியில் பெரும் அனுபவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். அதாவது பயிற்சி ஆட்டத்தை விளையாட ரோகித் மற்றும் கம்பீர் வலியுறுத்தி இருக்க வேண்டும் என்று மறைமுகமாக தனது கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -