ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 31ம் தேதிக்குள் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களது தக்கவைப்பு வீரர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்களது தக்கவைப்பு வீரர்கள் விபரங்கள் குறித்த தகவலை வெளியிட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் தோனி அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது. ஐபிஎல் தொடரிலிருந்து விரைவில் ஓய்வு பெறும் விதமாக கடந்த ஆண்டு கேப்டன் பதவியை விட்டும் விலகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் மகேந்திர சிங் தோனி தற்போது அன் கேப்ட்டு வீரராக இருப்பதால் அவரை மிகக் குறைந்த விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தக்க வைப்பதற்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மகேந்திரசிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவது குறித்து சில தகவல்களை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார் என்று தெரிகிறது.
இது குறித்து தோனி கூறும் போது “கடந்த சில வருடங்களாக நான் விளையாடும் கிரிக்கெட் ரசிக்க விரும்புகிறேன். எங்களது சிறுவயதில் மாலை 4 மணிக்கு விளையாட்டை நாங்கள் வெளியே சென்று விளையாடி ரசிப்போம். ஆனால் தொழில் முறை விளையாட்டை விளையாடும்போது ஒரு விளையாட்டை கிரிக்கெட்டை ரசிப்பது என்பது கடினமாகிவிடும். இது எளிதான விஷயம் அல்ல. இதில் உணர்ச்சிகளும் அர்ப்பணிப்பு உணர்வுகளும் நிறைய இருக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட்டை ரசிக்க விரும்புகிறேன்” என்று தோனி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:இப்போ ஜெயிச்சுட்டீங்க ஓகே.. ஆனா இதுல நாம சுயநலமா இருக்கோம்.. அத புரிஞ்சுக்கணும் – பாக் சோயப் அக்தர் விமர்சனம்
இதன் மூலமாக மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று மறைமுகமாக தனது பதிலை தெரிவித்து இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.