கம்பீர் ஒதுக்கட்டும்.. ஆனா எங்களுக்கு தேவை.. நியூசிலாந்து இந்திய கோச்சை தட்டி தூக்கியது – வெளியான தகவல்கள்

0
305
Vikram

நியூசிலாந்து தங்களது பயிற்சியாளர் குழுவில் இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரை இணைத்திருக்கிறது. ஆசிய கண்டத்தில் அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான முடிவு எடுத்திருக்கிறது.

மேலும் தங்களுடைய இலங்கையின் முன்னால் லெஜன்ட் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத்தையும் பயிற்சியாளர் குழுவிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆறு டெஸ்ட் போட்டிகளுக்கு தேவையான ஆசிய கண்டிஷன் பற்றிய அறிவை தங்களால் இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கின்றது.

- Advertisement -

ராகுல் டிராவிட் பயிற்சியாளர் குழு

இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பொழுது அவருடன் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் உள்ளே வந்தார். ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்ததும், புதிய பயிற்சியாளராக வந்த கம்பீர் விக்ரம் ரத்தோரை பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விரும்பவில்லை. அவர் தன்னுடன் இந்த பொறுப்புக்கு அபிஷேக் நாயரை கொண்டு வந்தார். எனவே விக்ரம் ரத்தோர் பதவி விலகினார்.

விக்ரம் ரத்தோர் 1990களின் பிற்பகுதியில் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர். மேலும் 2012 ஆம் ஆண்டு இந்தியத் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். மிகக்குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பயிற்சியாளர் குழுவில் அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அறிக்கை

இந்த நிலையில் விக்ரம் ரத்தோர் நியூசிலாந்து அணி செப்டம்பர் ஒன்பதாம் தேதி டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு இணைகிறார். இதற்கு அடுத்து இந்தியாவுடன் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 0 ஃபோர்ஸ்.. 91 ரன்.. டி20 வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையை செய்த ஹெட்மயர்.. சிபிஎல் 2024

மேலும் விக்ரம் ரத்தோர் மற்றும் இலங்கையின் ரங்கனா ஹெராத் இருவரும் தங்களது பயிற்சியாளர் குழுவில் இணைவது மிகப்பெரிய அளவில் தங்களுக்கு ஆசிய கண்டிஷன் பற்றிய அறிவை கொடுக்கும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி இருக்கிறது.

- Advertisement -