ஆஸி தொடருக்குப் பின்.. விராட் கோலி என்கிட்ட வந்து பேட்டிங்ல 3 சேஞ்ச் பண்ணினார் – சஞ்சய் பாங்கர் வெளியிட்ட தகவல்

0
209
Bangar

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு தன்னுடைய பேட்டிங்கில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி மொத்தம் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு சதமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வந்த விராட் கோலி தன்னுடைய பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சய் பங்கரிடம் சென்ற விராட் கோலி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்த திரும்பிய விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு அவர் தனது பேட்டிங் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இதுகுறித்து தற்போது சஞ்சய் பாங்கர் விரிவாக பேசியிருக்கிறார்.

விராட் கோலி பேட்டிங் மாற்றம் குறித்து பேசி உள்ள சஞ்சய் பாங்கர் ” விராட் கோலி பந்து வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தார்.அவர் எல்லா பந்தையும் முன் காலில் விளையாடவில்லை. அவர் இன்ஃபீல்டையும் கவர் செய்ய தயாராக இருந்தார். மேலும் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவரது ஆட்டம் சிறப்பாக மாறியது. காரணம் பாகிஸ்தானுக்கு எதிராக கூட அவர் பின்காலில் சுழல் பந்துவீச்சை விளையாடினார். பின்பு நம்பிக்கை வந்ததும் முன்பாதத்திற்கு வர ஆரம்பித்தார். முதலில் பின்பாதத்தில் விளையாடி பிறகு முன் பாதத்திற்கு வரவேண்டும் என்பதுதான் திட்டம்”

- Advertisement -

விராட் கோலி செய்த முக்கிய மாற்றம்

“விராட் கோலி சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்த பொழுது அவருடைய பேட் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்லிப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தது. இதனால் பந்தை வரவிட்டு விளையாட சிறந்த கண்ட்ரோல் இருந்தது. மீண்டும் இந்த முறைக்கு அவர் திரும்பி வந்தார். தயாரிப்பை பொறுத்த வரையில் அவர் எதையும் விட்டு வைக்காதவர். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு அவர் முன்னேறி திரும்பி வர வேண்டும் என்பது அவருக்கு தெரியும்”

இதையும் படிங்க : இன்னும் 50 ரன்.. சாம்பியன்ஸ் டிராபியில் புது வரலாறு படைக்கும் விராட் கோலி.. யாரும் செய்யாத மெகா சாதனை

“அவர் சிறப்பாக செய்த மாற்றம் என்னவென்றால் பந்தை விளையாடும் வரையில், பந்தை கடைசிவரையில் பார்த்துக் கொண்டிருப்பதுதான். நாங்கள் இருவரும் பேசிய மிக முக்கியமான விஷயம், பந்தை பருந்து போல் கடைசி வரை பார்த்து விளையாடுவது குறித்துதான். அவர் ரன்கள் எடுக்க மிகவும் பசியுடன் இருக்கிறார். மேலும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -