இந்திய அணியின் இளம் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தன்னுடைய திறமையால் ஒரு போட்டியை வென்று தரக்கூடிய அளவுக்கு கிடையாது என இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அதிரடியாக கூறியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நிதீஷ் குமார் ரெட்டி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அணிக்கு தேவையான ரன்களை எடுத்து, ஓரளவுக்கு அணியை நல்ல நிலையில் வைத்தார். மேலும் ஒரு சில விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
இன்று மொத்தமாக மாறிய கதை
இந்த போட்டியில் இளம்வீரர் கில் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டார். மேலும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நிதீஷ் குமார் ரெட்டி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வர வேண்டும் என சஞ்சய் மன்ஞ்ரேக்கர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தனி ஒரு வீரராக பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை ஓரளவுக்கு காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இப்படியான நிலையில் எம்எஸ்கே பிரசாத் நேற்று முடிவில் நிதீஷ் குமார் ரெட்டி பற்றி இவ்வாறு கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதீஷ் குமார் ரெட்டி திறமையானவர் இல்லை
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறும் பொழுது “நிதீஷ் குமார் ரெட்டி டீம் இந்தியாவில் குழப்பத்தை உருவாக்குகிறார். அவர் ஒரு முழுமையான வேகப் பந்துவீச்சாளரோ அல்லது முழுமையான பேட்ஸ்மேனோ கிடையாது. மேலும் அவரது திறமையை வைத்து அணிக்கு ஒரு போட்டியை வென்று கொடுக்க முடியாது. எனவே அவருடைய இடத்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரரைதான் சேர்க்க வேண்டும்”
இதையும் படிங்க : ஆரம்ப 2 ஓவர்.. கான்ஸ்டாஸை ஆறு ஏழு முறை அவுட்டாக்க முடியும்னு நினைச்சேன் – பும்ரா ஓபன் பேட்டி
“இந்த நான்காவது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவனில் கில் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்வார் என்பதால் அவர் மீது அதிக கவனத்தை இந்திய அணி நிர்வாகம் கொண்டு இருந்தது. இருந்த போதிலும் இங்கு இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. மேலும் ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவர் விளையாடியிருக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.






