விராட் கோலி கிடையாது.. இந்த இந்தியர்தான் நான் சந்தித்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன் – ஆண்டர்சன் பேட்டி

0
521
Anderson

இன்று உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் துவங்கும் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் தான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் யார்? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தற்பொழுது 42வது வயதிலும் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு தொடர்வது மிகப்பெரிய கடினமான விஷயம். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதை மிகவும் எளிமையான வேலையாக செய்து வருகிறார். ஆனாலும் ஓய்வு பெறுவதற்கான காலத்தை எட்டி விட்டதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரும் எட்டாத உயரமான 700 விக்கெட்டுகள் என்கின்ற சாதனையை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தரம்சாலா மைதானத்தில் செய்திருந்தார். இன்னும் 13 விக்கெட்டுகளை கைப்பற்றும் பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில்இணைவார்.

இந்த நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர்கள், மேலும் சிறந்த விக்கெட் மற்றும் சிறந்த நிகழ்வுகள் குறித்தான கேள்விகளுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் சந்தித்ததில் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இதேபோல் பந்துவீச்சாளர்களில் கிளன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெய்ன் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் சிறந்தவர் யார் என சரியாக சொல்வது மிகவும் கடினமான விஷயம். இருவருமே மிகவும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : பாபர் அசாம தூக்கணும்.. இவங்க 2 பேர் பாவம் இல்லையா.. இது தப்பான நடவடிக்கை – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

மேலும் 2013 ஆம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் கிளார்க் விக்கெட்டை கைப்பற்றியதும், இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் எடுத்ததும் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் நான் செயல்பட்ட விதம் என்னால் நம்ப முடியாத ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.