நீங்கள் செய்த 2 சம்பவம் டி20 வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.. உங்களால் ஓராண்டில் எவ்வளவு மாற்றம்- சேவாக் பாராட்டு

0
1882

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் பாராட்டி வரும் வேளையில், இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே. முதல் 10 ஓவர்கள் மெதுவாக விளையாடி அடுத்த பத்து ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிப்பதே இந்திய அணியின் வழக்கமான பாணியாக இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா கேப்டன் பதவியை ஏற்ற பிறகு 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த பின்னர் அதை முற்றிலுமாக மாற்றி அமைத்தார்.

சாதனைக்காக விளையாடுவதை தடுத்து அணியின் வெற்றிக்காக எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒரு கேப்டனாக அதை தானே முன் நின்று செய்தும் காட்டினார். அவரின் அதிரடியை பார்த்து பின்னால் வரும் பேட்ஸ்மேன்களும் ஆக்ரோஷமாக விளையாட தொடங்கினர். அதன் விளைவுதான் தற்போது டி20 உலக கோப்பை நம் இந்திய அணியின் கைகளில் வந்திருக்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி சரியான பேட்டிங் ஃபார்மில் இல்லை என்றாலும் அவரும் தனது நிலையை விட்டு அதிரடியாக விளையாட முயற்சித்தார்.

- Advertisement -

இந்த இருவரின் அர்ப்பணிப்புதான் தற்போது இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றி கூறும்பொழுது “டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை விராட் கோலி பற்றி என்ன சொல்ல வேண்டும். இதுவரையிலும் சிறந்த டி20 பேட்ஸ்மேன் ஆக உள்ளார்.

2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தனி ஒருவனாக நின்று போட்டியை வென்று கொடுத்ததில் இவர் செய்த சாதனைகள் ஏராளம். 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், தற்போது நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இவர் செய்த இரண்டு சம்பவங்கள் டி20 வரலாற்றில் நாட்டுப்புற கதைகளில் இடம் பெறும். அவரது ரன்களை விட விராட் கோலி களத்தில் அவரது அணுகுமுறை பார்ப்பதற்கே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவரது டி20 வாழ்க்கை முடிவுக்கு வருகிறது இருப்பினும் மற்ற இரண்டு வடிவத்திலும் அவர் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இதையும் படிங்க:நீங்க ரெண்டு பேரும் அனுபவிச்ச அந்த வலி எனக்கு நல்லா தெரியும்.. பெருமை படுத்திட்டீங்கப்பா – ரோகித் கோலிக்கு சச்சின் வாழ்த்து

ஒன்பது டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாடிய ரோஹித் சர்மா கடந்த ஒரே ஆண்டில் அணிக்குள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கொண்டு வந்தார். அணியை வழிநடத்துவதிலும் தாக்குதல் பாணி ஆட்டத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்ட வீரராக இருக்கிறார். அந்த முடிவால் தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. நீங்கள் உங்களை எப்படி வைத்துள்ளீர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன் மேலும் வரவிருக்கும் காலம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -