2025 18-வது ஐபிஎல் சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது பயிற்சியாளர் குழுவில் அதிரடியாக ஆஸ்திரேலியா முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை சேர்த்து அசத்தி இருக்கிறது.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு கூட்டணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை தாங்குகிறார். மேலும் அவருடன் சிஎஸ்கே அணியின் அனுபவமிக்க இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது இடம்பெற்று இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் குழுவில் இருந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிராவோ திடீரென விலகிக் கொண்டார். அவர் அங்கிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர் குழுவில் இணைந்து கொண்டார். எனவே சிஎஸ்கே அணியில் இந்த பொறுப்புக்கு இடம் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிராவோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக டி20 லீக்குகள் விளையாடி கொண்டு வந்தார். அவருக்கு சிஎஸ்கே அணி உடன் இருக்கும் நெருக்கத்தை விட நைட் ரைடர்ஸ் அணியுடன் இருக்கும் நெருக்கம் மிக அதிகம். இதன் காரணமாக அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த வருடம் முதல் பயிற்சியாளர் குழுவில் பணியாற்றுவார்.
ஆஸ்திரேலியா அணி 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பொழுது அந்த அணியின் வந்து வீச்சு பயிற்சியாளர் குழுவில் இந்தியா மற்றும் தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் இடம் பெற்று இருந்தார். மேலும் இவர் பங்களாதேஷ் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் ஒரு கட்டத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி 2025- அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல முடியுமா? இது நடந்தால் போதும்
இந்த நிலையில் பிரோ விட்டு சென்ற இடத்தை நிரப்புவதற்காக பந்துவீச்சு துணை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஸ்ரீதரன் ஸ்ரீராமை சிஎஸ்கே அணி நிர்வாகம் நியமித்திருக்கிறது. குறிப்பாக இவர் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார். தற்பொழுது சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளம்மிங், பேட்டிங் பயிற்சியாளராக டேவிட் ஹசி, பந்துவீச்சு ஆலோசகராக எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.