இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று துபாயில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சுற்றில் எதிர்ப்பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள, முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் ஒற்றை ஆளாக அந்த அணிக்கு வெற்றி தரக்கூடிய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பாக அந்த அணியின் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக எப்போதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் கோப்பை கனவை தகர்த்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் சாம்பியன் கனவை தகர்த்தார். இப்படி இந்திய அணிக்கு எப்போதுமே நெருக்கடியாக விளங்கி வரும் இவரை இந்திய அணியில் யாராவது ஒருவர் இவரை வெளியேற்ற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.
இதை யாராவது செய்யுங்கள்
இதுகுறித்து அவர் கூறும் போது “டிராவிஸ் ஹெட்டை யாராவது வெளியேற்றுங்கள், அது யாராக இருந்தாலும் சரி, இந்தியா மிக விரைவில் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அனுப்ப நினைக்கும் வீரர் அவர் தான். ட்ராவிஸ் ஹெட் வெளியேறுவது தான் ஆட்டத்தின் ஒரு முக்கிய தருணமாக இருக்கும்” என்று தான் நினைப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறி இருக்கிறார். எனவே டிராவிஸ் ஹெட் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினால் அது இந்திய அணிக்கு முக்கிய தருணமாக அமையும் என்று பலரும் கருதுகிறார்கள்.
இதையும் படிங்க:ஆஸி அணியை எதிர்கொள்ள என்ன ஸ்பெஷல் பிளான்.? எப்படி விளையாட போகிறோம்.. ரோகித் உடைக்கும் சீக்ரெட்
மேலும் இந்த விவாதத்தில் மற்றொரு ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கிலென் மேக்ஸ்வெல்லை வெளியேற்றுவதும் முக்கியமான விஷயம் என்று இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் “இது ஆட்டத்தின் நடுப்பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேக்ஸ்வெல் முக்கிய வீரராக திகழ்வார். எனவே அவரை வெளியேற்ற வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிகிறது” என அவர் கூறியிருக்கிறார்.






