சர்பராஸ் கான் 150 ரன்ஸ்.. மும்பையை வைத்து சஞ்சய் மஞ்சுரேக்கர் பதிவு.. இந்திய ரசிகர்கள் கடும் விமர்சனம்

0
1299

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பினாலும் இரண்டாவது இன்னிங்சில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்திய இளம் இந்திய ஆட்டக்காரர் சர்ப்ராஸ் கானை இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டிய விதம் தற்போது சமூக வலைதளங்களில் கண்டனத்துக்குரிய வகையில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சர்பராஸ் கான் அபார சதம்

இந்திய முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் டி20 உலக கோப்பையின் போது வட இந்திய கிரிக்கெட் வீரர்களை நான் பெரிதாக கவனிக்கவில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது கிரிக்கெட் உலகில் பெரிய பேசு பொருளாகி ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அற்புதமாக 110 பந்துகளில் சதம் அடித்து அசத்திய சர்ப்ராஸ்கானை சஞ்சய் மஞ்சுரேக்கர் பாராட்டிய விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி வீரர்கள் வெளியேறினாலும் சர்பராஸ் கான் நிதானமாகவும் அதே நேரத்தில் மோசமான பந்துகளை கண்டிக்கவும் தவறவில்லை. தனது முதல் சதத்தை நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்திருக்கும் நிலையில் அவரை சஞ்சய் மஞ்சுரேக்கர் மும்பை ஸ்கூல் ஆஃப் பேட்டிங் என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

பாராட்டிய சஞ்சய் மஞ்சுரேக்கர்

தனது சமூக வலைதளத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கர் “மும்பை ஸ்கூல் ஆஃப் பேட்டிங்கிற்கு சர்பராஸ் கான் எப்படி கை கொடுக்கிறார் என்று பார்க்க நன்றாக இருக்கிறது, இது ரன்கள் பற்றியது எனவே அதை எப்படி பெறுவது என்று அவருக்கு நன்றாக தெரியும்” என்று பாராட்டி இருக்கிறார். அவரது இந்த கருத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் எதிர்மறையான கண்டனங்கள் நிலவி வருகிறது. டி20 உலக கோப்பைக்கு அவ்வாறு பதிவிட்டதைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் இதற்கும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தம்பி சர்பராஸ் உன்னோட முதல் சதமே மாஸ்.. என்ன மாதிரியான ஒரு சந்தர்ப்பம் – சச்சின் மனம் திறந்த பாராட்டு

தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்புக்கு 400 குவித்து விளையாடி வருகிறது. இன்னும் ஒன்றரை நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி டிரா செய்யுமா அல்லது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது சர்ப்ராஸ்கான் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருக்கிறார்.

- Advertisement -