யுவராஜ் சிங் உடல்நிலை சுத்தமா முடியல.. அப்ப கூட பெருமைமிக்க தந்தையா இதைத்தான் சொன்னேன் – யோக்ராஜ் சிங் பேட்டி

0
176

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் இந்திய அணி உலகக் கோப்பை வென்றது குறித்தும் யுவராஜ் சிங் குறித்தும் சில உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தொடர் நாயகனான யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆல் ரவுண்டர் வீரரான யுவராஜ் சிங் 2007ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதேபோல இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற போதும் அதேபோல பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என்று இரண்டு துறைகளிலும் மிகவும் அபாரமாக செயல்பட்டு உலக கோப்பையை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

2011ம் ஆண்டு உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதிலிருந்து மிகவும் போராடி மீண்டு வந்து திரும்பவும் இந்திய அணியில் வெற்றிகரமாக நுழைந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது அது குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் யுவராஜ் சிங்குக்கு வருத்தப்படக் கூடிய செய்தி ஏதேனும் நடந்திருந்தாலும் இந்திய அணி உலக கோப்பையை வென்றதால் ஒரு தந்தையாக நான் பெருமைப்படுவேன் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் கூட இதைத்தான் கூறினேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நம் நாட்டைப் பொறுத்தவரை யுவராஜ் சிங் புற்றுநோயால் இறந்து அதேவேளை இந்தியா உலக கோப்பையை வென்றிருந்தால் அந்த சமயம் நான் ஒரு பெருமை மிக்க தந்தையாகவே இருந்திருப்பேன். இன்னும் நான் அவரைப் பற்றி மிகவும் அதிகமாக பெருமைப்படுகிறேன். இதனை நான் யுவராஜுக்கு போன் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். அவர் உடல்நிலை மிகவும் முடியாமல் இருந்தபோது கூட அவர் விளையாட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி 2025.. அறிவிக்கப்பட்ட பலமான ஆப்கானிஸ்தான் அணி.. நட்சத்திர சுழல் பவுலர் நீக்கம்.. முழு விபரம்

அந்த சூழ்நிலையிலும் கூட நான் யுவராஜிடம் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு எதுவும் ஆகாது, தைரியமாக விளையாடி இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று விடுங்கள் என்று தான் கூறினேன்” என்று உணர்ச்சிகரமான சில கருத்துக்களை பேசி இருக்கிறார். புற்று நோய்க்குப் பிறகு திரும்பவும் இந்திய அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் வெற்றிகரமாக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரிலும் தனது முத்திரையை பதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பிறகு அதே தரத்திலான ஆல் ரவுண்டர் வீரரை இந்திய அணி இதுவரை கண்டதில்லை என்பதே உண்மையான விஷயம்.

- Advertisement -