சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்ற காரணத்தினால், அவர்களுடைய இடத்திற்கு புதிய வீரர்களை நிரப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் வாய்ப்பு கொடுக்கப்படாமல் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இது குறித்து புதிய யோசனை ஒன்றை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சுப்மன் கில்லை எதிர்காலத்திற்கான மூன்று வடிவத்திற்குமான இந்திய அணியின் கேப்டனாக பார்க்கிறது. தற்போது டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிகளுக்கு அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலும் அடுத்து அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று செய்திகள் கூறுகிறது.
இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு முன்பாக இந்திய t20 அணியின் துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு பரிசோதிக்கப்பட்ட ருதுராஜ் பரிதாபமாக தன்னுடைய இடத்தை சிறப்பாக விளையாடியும் இழந்து இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட எல்லா விதத்திலும் அவருடைய எண்கள் சிறப்பாக இருக்கிறது.
எனவே நல்ல திறமைப்படுத்த ருதுராஜ் எதிர்காலம் வீணாக கூடாது என பல முன்னாள் வீரர்கள் கவலைப்படுகிறார்கள். மேலும் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இதற்கு ஒரு புதிய யோசனையை ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “ருதுராஜ் மற்றும் கில் இருவருமே நல்ல வீரர்கள் எனும் பொழுது ஏன் இருவருமே அணியில் இருக்க முடியாது. அவர்கள் இருவரது செயல்பாடுமே டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியாது. நிலைத்தன்மை மற்றும் புள்ளி விபரங்களில் ருதுராஜ் சிறப்பானவராக இருக்கிறார். அதே சமயத்தில் கில் உங்களுக்கு நல்ல டச் மற்றும் பவரை தருகிறார்.
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா இதை செய்யறது தப்பு.. டீமோட பேலன்ஸ் நிச்சயம் பாதிச்சிடும் – ரவி சாஸ்திரி அட்வைஸ்
எனவே இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானது. இந்த காரணத்தினால் இவர்கள் இருவருமே விளையாட வேண்டும். ஏன் இவர்கள் இருவருமே விளையாட முடியாது? என்று நான் கேட்கிறேன். ஏனென்றால் இவர்கள் இருவருமே மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்கள்” என்று கூறியிருக்கிறார்.






