உண்மைய சொல்லனும்னா.. இவர்லா கிரிக்கெட் ஆடுவாருன்னு நான் நினைச்சு கூட பார்க்கல – ரவி சாஸ்திரி பேட்டி

0
293

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இந்திய வீரர் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிய போது விராட் கோலி உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணி இளம் வீரர்களை மட்டுமே விளையாடி வரலாறு படைத்தது. அதிலும் குறிப்பாக கப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய அபார ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு கார் விபத்தில் ரிஷப் பண்ட் அடைந்த காயத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் அவர் கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார். பின்னர் தனது அபார கடின உழைப்பின் மூலமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அதற்குப் பிறகு டி20 அணியில் இடம் பிடித்து அங்கும் தனது திறமையை நிரூபித்து தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இடம் பிடித்துள்ளார். இந்த சூழ்நிலையில் ரவி சாஸ்திரி அவர் குறித்து சில முக்கிய கருத்துக்களை தற்போது கூறி இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் விளையாட நம்பிக்கை கொடுத்திருக்க மாட்டீர்கள்

இதுகுறித்து அவர் கூறும் போது “உண்மையாக அந்த சூழ்நிலையில் ரிஷப் பண்டை பார்த்திருந்தால் கிரிக்கெட் விளையாடுவதற்கான நம்பிக்கையை அவருக்கு நிச்சயம் கொடுத்திருக்க மாட்டீர்கள். அந்த சூழ்நிலையை என்னால் மறக்கவே முடியாது. அவர் காயம் அடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன். மோசமாக அடிபட்டு இருந்தார் உடலின் எல்லா இடங்களிலும் வடுக்கள் இருந்தன. மிகப்பெரிய காயத்திற்கு பிறகு அவர் திரும்பவும் கிரிக்கெட் விளையாடுவது ஒரு பெரிய அதிசயமாகும்.

இதையும் படிங்க:சாம்சன் ஆடுறது டவுட்.. அவர் செஞ்ச இந்த வேலையால வாய்ப்பு இவங்க 2 பேருக்குதான் – ஆர்பி சிங் கருத்து

பின்னர் டி20 உலக கோப்பையில் விளையாடி அதற்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல நிஜமாகவே அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை” என்று ரவி சாஸ்திரி ரிஷப் பண்டை பாராட்டி பேசி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றுவார் என்று அனைத்து ரசிகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -