இந்திய அணி ரசிகர்கள் இந்திய அணியை மட்டுமே ஒரு பக்கமாக ஆதரிப்பதை வெளிநாட்டவர்கள் எப்படி தவறு என்று சொல்ல முடியும் என இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி விளையாடும் போட்டிகளில் இந்திய ரசிகர்கள் எப்பொழுதும் தங்களது அணிக்கு அதிகபட்ச ஆதரவை கொடுப்பார்கள். அதே சமயத்தில் எதிரணி சிறப்பாக செயல்படும் போது அமைதியாக இருப்பார்கள். இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்தபடியே இருக்கிறார்கள்.
இந்திய ரசிகர்கள் உண்மை என்ன?
இந்திய ரசிகர்கள் தங்கள் அணியை அதிகபட்சம் ஆதரித்த போதிலும் கூட, எதிரணியில் சிறந்த செயல்பாட்டை வீரர்கள் வெளிப்படுத்தும் பொழுது அதற்கான மதிப்பளித்து வரவேற்கவும் செய்வார்கள். அதே சமயத்தில் ஒவ்வொரு பந்துக்கும் தங்கள் ஆதரவை எதிரணிக்கு கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இப்படியான அணுகுமுறையை வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் இந்தியா விளையாடும் போட்டிகளின் போது கிரிக்கெட் வர்ணனை செய்யக்கூடியவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்திய அணி எதிரணி எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் ஆதரிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அமைதியாக இருப்பதை பார்க்க விரும்புவதாக இதை வைத்து பாட் கம்மின்ஸ் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி இப்படித்தான் பதில் சொல்லுவோம்
வெளிநாட்டவர்களின் இந்த விமர்சனம் குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் “ஒவ்வொரு அணிகளுக்கும் அணிக்கும் உள்நாட்டில் கிடைக்கும் ஆதரவு என்பது இயல்பானது. எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் அணி மற்றும் வீரர்கள் போட்டியில் தோற்பதை விரும்புவது கிடையாது. ஆனால் வெளிநாட்டு வர்ணனையாளர்கள் மற்றும் ஊடகங்களால் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் மீது இப்படியான குற்றம் சுமத்தப்பட்டு கொண்டே வருகிறது.
இந்திய ரசிகர்கள் மற்றும் தங்கள் சொந்த அணியை ஆதரிக்கவில்லை, உலகில் எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் சொந்த அணிகளை ஆதரிக்கிறார்கள். இதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். மேலும் எதிரணியை ஆதரிப்பது என்பது எல்லோரும் அரிதாகவே செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது.
இதையும் படிங்க :
அடுத்த முறை வெளிநாட்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த ஆதரவு பற்றி தவறாக பேச ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் நாட்டு ரசிகர் ஏன் உங்கள் அணியை ஆதரிக்க இங்கு வரவில்லை? என்று நான் கேட்க வேண்டும். அவர்களின் தாக்குதலை நாம் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குப் புரியும் ஒரே மொழி அதுதான்” என்று கூறியிருக்கிறார்.