இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தாகி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியா இளம் பேட்ஸ்மேன் குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பிசிசிஐயின் திறமை
இந்திய கிரிக்கெட் அணி இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களை உருவாக்குவதில் உலக நாடுகளில் மிகச் சிறந்த பெயரை பெற்றுள்ளது. ஜாம்பவான் வீரர்கள் இந்திய அணியில் இருந்து ஓய்வினை அறிவித்தாலும் அவர்களுக்கு பிறகு சிறந்த இளம் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வாய்ப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகம், சரியான நேரம் பார்த்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி உருவாக்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்கால சிறந்த தொடக்க வீரராக கருதப்படும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதித்து வருகிறார். இந்தியாவில் சிறப்பாக விளையாடினாலும் வெளிநாடுகளில் சற்று தடுமாறும் அவர், இதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்க தொடரில் சற்று பின் தங்கி இருந்தாலும் தற்போது அனைவரின் பார்வை அவர் ஆஸ்திரேலியா தொடரில் எப்படி செயல்படுகிறார் என்று பார்க்கப்படும் என இந்தியாவின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டால் போதாது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் குவித்த ரன்களை பார்க்கும் போது இந்தியாவில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் வெளிநாடுகளில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கும். இதற்கு முன்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக அமையவில்லை. எனவே அனைவரது பார்வையும் தற்போது ஆஸ்திரேலியாவில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கும்.
இதையும் படிங்க:2 நாளில் எமர்ஜிங் ஆசிய கப்.. போட்டி அட்டவணை மற்றும் எந்த டிவியில் பார்க்கலாம்? – முழுமையான தகவல்கள்
இந்திய சூழ்நிலையில் நீங்கள் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள் ஆனால் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் போது தான் ஆல்ரவுண்டர் பேட்டர் என்ற முத்திரையை பெறுவீர்கள். மேலும் கடந்த ஒரு வருடத்தில் பார்க்கும்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷார்ட் பால்களை விளையாடும் விதத்தில் அவர் முன்னேறி இருக்கிறார். இந்தியாவில் விளையாடி இருந்தாலும் வங்கதேசத்தில் இருந்த சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நன்றாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார். எனவே ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா அடித்து எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.